இயேசுவைக் காண TO SEE JESUS 54-0718E ஞாயிற்றுக்கிழமை மாலை, ஜூலை 18, 1954 லேன் டெக் உயர்நிலைப்பள்ளி, சிகாகோ, இல்லினாய்ஸ், அமெரிக்கா சகோ.வில்லியம் பிரன்ஹாம் இயேசுவைக் காண (54-0718E) நன்றி. நன்றி. நாம் ஜெபிப்போமா: எங்கள் பரம பிதாவே, உமக்கு முன்பாக நிற்கவும், உம்முடைய பிள்ளையாகிய எங்கள் மீட்பர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், உம்முடைய அன்பான இந்தப் பிள்ளைகளுக்கு ஊழியஞ்செய்யவும் எங்களுக்குக் கிடைத்த இந்தச் சிலாக்கியத்திற்காக இன்றிரவு உமக்கு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். வந்திருக்கிற ஒவ்வொருவர் மீதும் ஒரு விசேஷித்த ஆசீர்வாதம் தங்கவேண்டுமென்று இன்றிரவு நாங்கள் ஜெபிக்கிறோம். இன்றிரவு இங்கே இருக்க விரும்பியும், வியாதிகளி னிமித்தமும், மருத்துவமனைகளில் இருப்ப தாலும், வீடுகளுக்குள் முடங்கிக் கிடப்பதாலும் வரமுடியாமல் போனவர்களையும் நாங்கள் நினைவுகூருகிறோம். பிதாவே, நீர் அவர்களை ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இது விடுதலையின் நேரமாகவும்கூட இருக்கக்கடவது. உமது மகிமைக்காக இந்த இடத்தை நீர் பரிசுத்தப்படுத்தும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். நாங்கள் செய்கிற அல்லது சொல்லுகிற எல்லாவற்றிலுமிருந்து மகிமையைப் பெற்றுக் கொள்ளும், எல்லாவற்றையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 2 அமருங்கள். (...?...அவர்கள் மூடுகிறார்களா? அது நல்லது. சரி. பின்பு அனைவரும்...?...) மாலை வணக்கம், நண்பர்களே. நமது கர்த்தருக்காக எட்டு நாட்கள் நடக்கும் கூட்டத்தை ஆரம்பிக்க, இந்த அழகான பெரிய நகரமாகிய சிகாகோவிற்கு இன்றிரவு மீண்டும் வந்திருப்பது ஒரு சிலாக்கியமாகும். நாம் அழைக்கிறபடியே, ஒரு உண்மையான பழைய காலத்து எழுப்புதல் நமக்கு உண்டாகும்வரை, அவர் ஒவ்வொரு இருதயத்தையும் விசித்திரமான முறையில் அசைப்பார் என்று நான் அவரை நம்புகிறேன். இந்தக் கூட்டத்தின்போது அநேகர் இரட்சிக்கப்படக்கடவர்கள். அநேகர் பரிசுத்த ஆவியானவராலே நிரப்பப்படக்கடவர்கள். அதன் பின்பு, எங்கும் விசுவாசம் பற்றிக் கொள்ளும் வகையிலும், இந்தக் கூட்டத்தின் சமயத்தில் பாடுபடுகிற அநேக ஏழை, வியாதிப்பட்ட மனுஷர்கள் சுகமாக்கப்படும் வகையிலும், வியாதிப் பட்டவர்களுக்கும், பாதிக்கப் பட்டவர்களுக்கும் ஊழியஞ் செய்யப்படக்கடவது. சகோதரர் ஜோசப் போஸ் அவர்களுடனும், அவருடைய பணியாளர்கள் மற்றும் வேலையாட்களுடனும், சிகாகோ மற்றும் அதைச் சுற்றியுள்ள எங்கள் நண்பர்களாகிய உங்கள் அனைவருடனும் மீண்டும் இணைந்திருப்பதில் நாங்கள் நிச்சயமாகவே மகிழ்ச்சியடைகிறோம். கர்த்தர் உங்களைச் சம்பூரணமாய் ஆசீர்வதிப்பாராக என்பதே என் ஜெபம். 3 இது, ஒருவேளை அடுத்த ஓரிரு ஆண்டுகளுக்கு, இந்த வகையான கூட்டங்களின் முடிவாக இருக்கலாம். நான் உடனே வெளிநாடு செல்லவிருக்கிறேன்; நான் மிகவும்... சற்று நேரத்திற்கு முன்பாக நான் இங்கே நடந்து வந்துகொண்டிருந்தேன், ஒருவிதமாக கால் விரல்களில் நடப்பதுபோல; வெளிநாடு செல்வதற்கு, உங்களுக்கு போதுமான அளவு தடுப்பூசி போடப்பட்டிருந்தால் ஒழிய அவர்கள் உங்களை விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டார்கள். நான் அவர்களிடம் தர்க்கம் பண்ணி, எனக்கு அது தேவையில்லை என்று சொல்ல முயற்சித்தேன், ஆனால் அவர்கள் எனக்குச் செவிகொடுக்கவில்லை. அவர்கள்... ஆகையால் வேதம் சொல்கிறது, "இராயனு டையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள்." அதனால் நான் ஒரு பெரிய குவியலாக ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று, என் கைகள் எல்லாம் வீங்கியிருக்கின்றன, நாங்கள் அவற்றைப் போட்டுக்கொள்ள வேண்டியதில்லை என்றே நான்-நான்-நான் விரும்புகிறேன், ஆனால் நாம் அனைவரும் அதைச் செய்தாக வேண்டும். கடந்த முறை மஞ்சள் காய்ச்சலுக்கான அந்த ஊசியைப் போட்டுக்கொள்ளாமல் தப்பிக்க நான் முயற்சித்ததை நினைவுகூருகிறேன், அப்படியே நான் நேராக விமான நிலையத்திற்குச் சென்றேன், எப்படி இருந்தாலும் அவர்கள் என்னை அங்கேயே தங்கியிருந்து அதைப் போட்டுக்கொள்ளும்படி செய்தார்கள். பின்பு, ஊசி போட்டுக்கொண்டு பத்து நாட்கள் ஆகாவிட்டால் நான் ஆப்பிரிக்காவில் இறங்க முடியாது என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஆனால் கர்த்தர் மருத்துவ சங்கத்தினரிடத்தில் எனக்குத் தயவு கிடைக்கச் செய்தார், இரண்டாவது நாள் காலையில்... நான் ஒரு நாள் இரவில் வந்து சேர்ந்தேன், அடுத்த நாள் காலையில் தங்களுடன் காலை உணவு சாப்பிட அவர்கள் என்னை அழைத்தார்கள். எனவே, அது சரியாகத்தான் இருக்கும் என்று தாங்கள் நினைப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள், ஆகவே நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன், அவர்கள் மிகவும் நல்லவர்களாக இருந்தார்கள். ஊழியம் செய்யத் தொடங்குவதற்கு முன்பாக நான் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை, நாங்கள் தரை இறங்கிய அதே இரவிலேயே நாங்கள் தொடங்கினோம். கர்த்தரும் பெரிய காரியங் களைச் செய்தார். 4 நான் நம்புகிறேன், மேலும் என் வாழ்நாளிலெல்லாம் கர்த்தர் எனக்கு ஊழியஞ் செய்ய அனுமதித்ததிலேயே இந்த முறை இந்தியாவில் நடப்பதுதான் மாபெரும் கூட்டமாக இருக்கும் என்று அறிவேன். தரிசனத்தை நான் இங்கே எழுதியிருக்கிறேன்; மக்களில் அநேகர் அதை உங்கள் சொந்த வேதாகமங்களிலேயே எழுதியிருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். அது முடிந்த பின்பு, அது அப்படியே இருக்குமா இல்லையா என்பதை நீங்கள் பார்க்கலாம். அது அப்படி நடக்காவிட்டால், நான் கர்த்தரிடம் பேசவில்லை என்றோ அல்லது அவர் என்னிடம் பேசவில்லை என்றோ நீங்கள் சொல்லலாம். ஆனால் அது நடந்தால், அவர் என்னிடம் பேசினார் என்பதை நீங்கள் நினைவுகூர்வீர்கள். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற இந்த மாபெரும் நாளில், இன்று நாம் அனைவரும் சிக்கியிருக்கிற இந்த மிகுந்த மன அழுத்தத்திற்கு மத்தியிலும், இயேசு மக்களைக் கைவிட வில்லை, இன்னும் நமது கர்த்தர் நம்மை விட்டு விலகவில்லை என்பதை அறிய இன்றிரவு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் சொன்னார், "நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்கு, பரிசுத்த ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்; உலகம் பெற்றுக்கொள்ளக்கூடாத சத்திய ஆவியானவரே அவர்." 5 இந்தச் சத்திய ஆவியானவர் முடிவு பரியந்தம் நம்முடன் இருக்கப் போவதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். அந்தச் சத்திய ஆவியானவர் வேறொருவரும் அல்ல, கர்த்தராகிய இயேசு தாமே ஆவிக்குரிய ரூபத்தில் வந்திருக்கிறார். ஏனெனில் அவர் சொன்னார், "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது. ஆனாலும் நீங்கள் என்னைக் காண்பீர்கள், ஏனெனில் உலகத்தின் முடிவுபரியந்தம் நான் உங்களுடனே, உங்களுக்குள்ளேயே இருப்பேன்." அதின் அர்த்தம் இன்றிரவு என்பதாகும். நாம் எங்கிருந்தாலும், இயேசு நம்முடன் இருப்பார் என்று அறிந்துகொள்ளும் ஆறுதலான வார்த் தைகள் நமக்கு இருக்கின்றன. சிறிய சபைகளுக்குச் செல்லும் உங்களில் அநேகருக்கு, சபை எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, "இரண்டுபேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடிவந்திருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்" என்று இயேசு சொன்னார். நமது சிறிய சபை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், கர்த்தராகிய இயேசு நம்முடன் இருக்கிறார் என்பதை அறிவது எப்பேர்ப்பட்ட ஒரு ஆறுதலான வார்த்தை, அதற்காக நாம் மகிழ்ச்சியடைகிறோம். 6 இப்பொழுது, ஒரு பேச்சாளனாகப் பார்க்கப்போனால், நான் ஒன்றும் பெரிய பேச்சாளர் இல்லை. சகோதரர் ஜோசப் இங்கே பேசுகிறார், சகோதரர் மூர் நாளைக்கு ஏதாவது ஒரு நேரத்தில் இங்கே இருப்பார் என்று நினைக்கிறேன், சகோதரர் ஜாக் மூர். லூசியானா மாகாணத்திலுள்ள ஷ்ரீவ்போர்ட்டைச் சேர்ந்த ரெவரெண்ட் மூர் நம்முடன் இருப்பார். நாளை மதியம், கர்த்தருக்குச் சித்தமானால், வியாதிக்கான காரணம் என்ன மற்றும் அதற்கான பரிகாரம் என்ன என்பது குறித்து நாளை மதியம் இங்கே (இரண்டு மணிக்கா, சகோதரர் ஜோசப்?) இரண்டரை மணிக்கு ஒரு-ஒரு போதனை அல்லது உரையை வழங்க விரும்புகிறேன். அது ஒரு ஆயத்தக் கூட்டமாக இருக்கும். அந்த ஆயத்தக் கூட்டங்களைக் கேட்க வருபவர்களுக்கு ஜெப அட்டைகளை வழங்க அங்குதான் நாங்கள் முயற்சி செய்கிறோம். அவசரத் தேவையோடு வருபவர்களுக்கான ஜெப அட்டைகளுக்கு ஊழியம் செய்ய-ஊழியம் செய்யச் சிறிது நேரம் கிடைக்கும்படி, இரவு நேரத்தில், ஒரு சிலவற்றை நாங்கள் கொண்டு செல்கிறோம். ஆராதனைகளின் நேரத்தில், ஒரே சமயத்தில் எல்லாராலும் இந்த முறையில் ஊழியஞ்செய்ய முடியாது. நாங்கள் ஜெப அட்டைகளைக் கொடுக்கிறோம். 7 இப்பொழுது, அழைப்புகள் கொடுக்கப் படும், ஜெபிக்கப்படுவதற்காக வருவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கும்படியாக, ஒவ்வொரு நாளும் நாங்கள் புதிய, புதிய ஜெப அட்டைகளைக் கொடுக்கிறோம். நாங்கள் அதைச் செய்து, அந்த முறையில்தான் ஆராதனைகளை நடத்திக் கொண்டு வருகிறோம். வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின்பு, கர்த்தருக்குச் சித்தமானால், ஜெப அட்டைகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும், மக்களை வரிசையில் நிற்க வைப்பதற்கும் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்க நான் முயற்சிக்கப் போகிறேன், கர்த்தருக்குச் சித்தமானால். ஆகவே நான் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த பின்பு எனது கூட்டங்களில் ஒரு மாற்றம் இருக்கும் என்று சொன்னேன். இப்பொழுது, அவருடைய ஆசீர்வாதங்கள் உங்கள் அனைவர் மீதும் தங்கும்படி நான் ஜெபிக்கிறேன். 8 இப்பொழுது, நான் அவருடைய வார்த்தையைச் சிறிது நேரம் திறந்து, இந்த வார்த்தையிலிருந்து ஒரு பகுதியை வாசிக்க விரும்புகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, அவருடைய வார்த்தை நித்தியமானது. எனது வார்த்தைகள் மற்ற மனுஷர்களின் வார்த்தை களைப் போன்றவையே; அவை தவறிப்போகும், ஆனால் இந்த வார்த்தைகளோ தேவனு டையவை. இப்பொழுது, பரிசுத்த யோவான் எழுதின சுவிசேஷம் 12-ம் அதிகாரம், 20, 21, 22-ம் வசனங்களில், இந்த வார்த்தைகளை நாம் வாசிக்கிறோம்: பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 9 வார்த்தையை வாசித்ததின்மீது அவர் தமது ஆசீர்வாதங்களைக் கூட்டுவாராக. இன்றிரவு, இது ஆராதனையின் முதல் இரவு என்பதால், இதை ஒரு தலைப்பாகப் பயன்படுத்த நான் விரும்புகிறேன். இப்பொழுது, நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், வேதத்தின் சில பகுதிகளில் இருந்து சில உபதேசங்களை எடுத்து, சிறிது நேரம் அதைக் குறித்துப் போதிக்க விரும்புகிறேன். இது ஆராதனையின் ஆரம்பம் என்பதால், எங்கள் அறிவுக்கு எட்டியவரை, நமது கர்த்தராகிய இயேசுவின் மகிமைக்காக, ஆராதனைகள் என்ன-எப்படிப்பட்டவையாக இருக்கின்றன, அவற்றை நாங்கள் எப்படி நடத்த முயற்சிக்கிறோம் என்பதற்கான ஒரு சுருக்கத்தை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன். அதாவது, எபிரெயர் 13:8-ல் காணப்படுவதே-எனது முக்கிய கருப்பொருள், அதுவே எப்போதுமே என் கூட்டங்களின் கருப்பொருளாக இருந்து வருகிறது: "இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்." இயேசு நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று என் முழு இருதயத்தோடும் நான் விசுவாசிக்கிறேன். நேற்று அவர் எப்படியிருந்தாரோ, இன்றைக்கும் அவர் அப்படியே இருக்கிறார், என்றென் றைக்கும் அப்படியே இருப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். அதுவே வார்த்தையின் உபதேசம் என்று நான் விசுவாசிக்கிறேன். 10 இப்பொழுது, இன்றிரவுக்கான தலைப்பு, "இயேசுவைக் காணுதல்" என்பதாகும். இன்றிரவு இங்கு வந்திருக்கிற ஒவ்வொரு நபரும் நல்ல நோக்கங்களோடு வந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன். கர்த்தராகிய இயேசுவைக் குறித்து ஏதாவதொன்றை அறிந்துகொள்வதே உங்கள் நோக்கங்களாக இருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். உங்களுக்கு ஒரு-உலகப் பிரகாரமான சிந்தை இருந்திருந்தால் நீங்கள் இங்கு வந்திருக்க மாட்டீர்கள், உலகப் பிரகாரமான ஏதோ சில இன்பங்களை அனுபவிக்கும் இடமாகிய கடற்கரையில் குளித்துக்கொண்டோ, அல்லது அருங்காட்சி யகத்திலோ, அல்லது பூங்காக்களிலோ, அல்லது வேறெங்கோ, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்துகொண்டு ஒருவேளை நீங்கள் அங்கே இருந்திருப்பீர்கள். ஆனால் இது எதைக் குறித்தது என்பதை அறிந்துகொள்ள விரும்பியதாலேயே நீங்கள் இன்றிரவு வந்திருக்கிறீர்கள். ஒருவேளை நீங்கள் ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவராக இருக்கலாம். மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவ நபரும்-நபரும் கர்த்தராகிய இயேசுவைக் குறித்து அதிகமாக அறிந்துகொள்ள வாஞ்சிக்கிறார். அதை நீங்கள் விசுவாசிக்கவில்லையா? இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு நபரும் காண வாஞ்சிக்கும் ஒரு காரியம் இருக்கு மானால், அது உண்மையிலேயே கர்த்தராகிய இயேசு இங்கு மேடையிலோ அல்லது வேறெங்காவதோ நேரில் தோன்றுவதைக் காணுவதே என்று நான் நம்புகிறேன். அவருடைய வருகைக்காகக் காத்திருப்பதில் அதுவே நமது மாபெரும் எதிர்பார்ப்பாகும். ஒருநாள் அவர் திரும்பி வருவார், நாம் அவரைக் காண்போம். அந்த நேரம் வரும்வரைக்கும், அவர் ஒரு ஆவிக்குரிய ரூபத்தில் நம்முடன் இருக்கிறார், நாம் நமது கைகளை ஒப்புக்கொடுக்கும்போது மட்டுமே அவர் கைகளைக் கொண்டிருக்கிறார். நாம் நமது கண்களை ஒப்புக்கொடுக்கும்போது மட்டுமே அவர் கண்களைக் கொண்டிருக்கிறார், நாம் நமது சத்தத்தை அவருக்கு ஒப்புக் கொடுக்கும்போது மட்டுமே அவர் சத்தத்தைக் கொண்டிருக்கிறார். நாம் முழுமையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு பாத்திரமாக ஆகிறோம்; அப்போது பரிசுத்த ஆவியானவர் நம் மூலமாகப் பேசுகிறார். 11 இங்குள்ள இந்த ஒலிவாங்கி, இதன் மூலமாகச் செல்ல இங்கு ஒரு சத்தம் இருந்தாலொழிய இது-இது ஒரு ஊமைதான். நாமும், சபையும் அப்படியே இருக்கிறோம்: தேவன் சித்தங்கொள்ளுகிறபடி ஆவியானவர் சபை மூலமாகப் பேசும்படி, தேவனுடைய ஆவியானவருக்குக் கீழ்ப்பட்டிருந்தாலொழிய சபை முற்றிலும் ஒரு ஊமைதான். அது-அது ஒரு வெளிப்பாட்டு வழியாக இருக்கிற வரையிலும், அது உலகத்திற்கு ஒரு சத்தமாக மாறுகிறது. சபையானது உலக மக்களுக்குக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சத்தத்தை வெளிப்படுத்தும் வழியாக இருக்கிறது. 12 இப்பொழுது, இங்கு ஏதாவது ஒரு நபர், யாராவது ஒருவர், இப்படிச் சொல்வார் களானால்... இங்குள்ளவர்களில் எத்தனை பேர் கர்த்தராகிய இயேசுவைக் காண விரும்புவீர்கள்? உங்களைச் சுற்றி உங்கள் கைகளைப் பார்ப்போம். ஒவ்வொருவரும், ஒவ்வொருவரும் அவரைக் காண விரும்புவீர்கள். இப்பொழுது, நானும் எனது கையை உயர்த்தியிருந்தேன். நான் அவரைக் காண மிகவும் விரும்புவேன், இன்றிரவு நான் விசுவாசிக்கிறேன்... இப்பொழுது, நம்மால் ஏன் அவரைக் காண முடியவில்லை? அதுதான் அடுத்த காரியம். இப்பொழுது, அவர் நம்மிடமிருந்து தம்மை மறைத்துக்கொள்ள மாட்டார் என்றும், தம்மைக் குறித்து நமக்கு வெளிப்படுத்தி, நம்மிடம் வந்து, நம்முடன், நமக்குள்ளே இருப்பார் என்றும்; அவர் மாம்சத்தில் இருந்தபோது எப்படி இருந்தாரோ, அதேபோல தமது சபையிலும் இருப்பார் என்றும்; அவர் மீண்டும் மாம்சத்தில் வரும்வரைக்கும் அதே வழியில் தொடருவார் என்றும் அவர் வாக்குத்தத்தம்பண்ணினார். அது அவருடைய வாக்குத்தத்தமா? அது சத்தியம் என்று நாம் அனைவரும் அறிவோம். வேதம் இப்படிச் சொல்கிறது. நமது கர்த்தராகிய இயேசு, செல்வதற்கு முன்பாக, "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது" என்று சொன்னார். இப்பொழுது, அது உலகத்தைக் குறிக்கிறது. அங்குள்ள உலகம் என்றால்-உலகம் அல்ல-அது உலக முறைமை, அது-இந்த உலகத்தை, பூமியை அல்ல, அது உலக முறைமையை, மக்களைக் குறிக்கிறது. "இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது, ஆனாலும் நீங்கள்..." இப்பொழுது, அவர் அந்த தனிநபர்களிடம் மட்டுமல்ல, "நீங்கள்" என்ற ஒன்றுடன் பேசிக் கொண்டிருந்தார், ஏனென்றால் கவனியுங்கள். பார்த்தீர்களா? "ஆனாலும் நீங்கள் என்னைக் காண்பீர்கள். நீங்கள் காண்பீர்கள்." ஏனெனில் உலகத்தின் முடிவுபரியந்தம் அவர் நம்முடன், நமக்குள்ளேயும் இருப்பார் என்று வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார். அது சரியா? 13 இப்பொழுது, அடையாளம்-"நீங்கள்" என்ற பக்கத்தில் யாரோ ஒருவர் இருக்கப் போகிறார்கள். "நான் உங்களுடனே இருப்பேன், ஆகையால் நீங்கள் என்னைக் காண்பீர்கள்." அவரைக் காண விரும்பாத உலகின் ஒரு பக்கம் இருக்கப் போகிறது. அவர்கள் வெறுமனே-சரி, ஒருவேளை ஆர்வத்தின் காரணமாக, அவர்கள் அவரைக் காண விரும்பலாம். மற்றபடி, வெறுமனே கிரயத்தைச் செலுத்தி, ஒரு கிறிஸ்தவனாக மாறுவது என்றால், அது வேறு விஷயம். இப்பொழுது, இன்றிரவு இங்குள்ள "நீங்கள்" என்ற பிரிவினர், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காணும் சிலாக்கியத்தைப் பெறலாம், "நீங்கள்" என்ற நபர்கள். இன்றிரவு நீங்கள் ஒவ்வொருவரும் அந்த "நீங்கள்" என்ற பிரிவினராக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். 14 இப்பொழுது, இயேசுவினிடத்தில் வந்த இந்தக் கிரேக்கர்கள், வாஞ்சையுள்ள ஒரு கூட்ட மக்களாக இருந்தார்கள், ஒருவேளை, சிகாகோவாகிய இங்கே அநேக கிரேக்கர்கள் இருப்பதுபோல இருக்கலாம். இப்போது அநேக-அநேக கிரேக்கர்கள் ஒருவேளை இங்கே வந்திருக்கலாம். சரி, வந்தவர்கள் உங்கள் பிதாக்களாக இருந்தார்கள், மேலும் "கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள், யூதர்கள் அடையாளங்களைத் தேடுகிறார்கள்" என்று வேதம் சொல்கிறது. சரி இப்பொழுது, கிரேக்கர்கள் இன்னும் ஞானத்தைத் தேடுகிறார்கள், யூதர்கள் அடையாளங்களைத் தேடுகிறார்கள். ஆனால் பவுல் சொன்னார், "நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் கிரேக்கருக்குப் பைத்தியமாயும், யூதருக்கு இடறலாயும் இருக்கிறார், ஆனால் விசுவாசிக்கிற வர்களுக்கோ, நித்திய ஜீவனாயிருக்கிறார்." 15 இப்பொழுது, எங்களுக்குத் தெரிந்த சிறந்த வழியில் இதை ஒரு-ஒரு வடிவத்தில் கொடுக்க நாங்கள் முயற்சிக்கப் போகிறோம். இப்பொழுது, இதை நாங்கள் கொண்டுவர முயற்சிக்கையில், நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இப்பொழுது, அந்தச் சமயத்திலிருந்த கிரேக்கன், அவன் இயேசுவின் ஞானத்தைக் காண விரும்பவில்லை, அவன் இயேசுவை மட்டுமே காண விரும்பினான். "ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்" என்று அவன் சொன்னான். அவர் ஞானத்தைக் கொண்டிருந்தார் என்று அவன் அறிந்திருந்த போதிலும், அவனுடைய ஞானத்தை அறிய அல்ல, ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவே விரும்பினார்கள். இப்பொழுது, அதுவே முக்கிய காரியமாக இருந்தது: தாங்கள் கர்த்தராகிய இயேசுவைக் காண வேண்டும் என்பதே அவர்களின் வாஞ்சையாக இருந்தது. பின்பு, அவர்கள் பிலிப்புவிடம் சொன்னார்கள். பிலிப்பு போய் அந்திரேயாவுக்குச் சொன்னான், இந்த யூதர்கள் அவரை வாஞ்சிக்கிறார்கள் என்று அவர்கள் போய் இயேசுவுக்குச் சொன்னார்கள். இப்பொழுது, எத்தனை பேர் இயேசுவைக் காண விரும்புவீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டதின்படி, இன்றிரவு இங்குள்ள இருதயங்களின் வாஞ்சை அதுவே. என்னால் பார்க்க முடிந்தவரை, இயேசுவைக் காண விரும்புவதாக ஒவ்வொருவரும் தங்கள் கையை உயர்த்தினார்கள். இப்பொழுது, அது மனிதப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது. ஒவ்வொருவரும், எல்லா காலங்களிலு முள்ளவர்களும், தேவனைக் காண விரும்பு கிறார்கள். 16 வேதாகமத்தில் மிகப்பழமையான புத்தகமாகிய யோபு, அவர் சொன்னார், "நான்..." வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இங்குள்ள குழந்தைகளுக்கும் புரியும் வகையில் அதை அமைத்துச் சொல்கிறேன். "அவர் எங்கே வசிக்கிறார் என்று எனக்குத் தெரிந்திருந்தால், நான் சென்று அவர் கதவைத் தட்டி, அல்லது அது போன்ற ஏதாவதொரு விதத்தில், அவரோடு ஒரு உரையாடலை வைத்துக்கொள்வேன்." தேவன் யோபுவிடம், "இப்போது நீ ஆயத்தமாகு. புருஷனைப்போல் இடைக் கட்டிக்கொள், நான் உன்னோடு பேசப் போகிறேன்" என்றார். தேவன் ஒரு பெருங்காற்றின் ரூபத்தில் இறங்கிவந்து, "யோபுவே, பூமியின் அஸ்திபாரங்களை நான் போட்டபோது நீ எங்கேயிருந்தாய்? மற்றும் பல காரியங்களைச் சொன்னார்." அவர் நேரடியாக யோபுவிடம் பேசினார், ஏனென்றால் அவர்-அவர் யோபுவை நம்பினார், யோபு தேவனை நம்பினார். மேலும் தேவன் தமது தாசன் ஒரு உத்தமமான மனுஷன் என்று சொன்னார். யோபுவிடம் எந்தக் குறையும் இருக்கவில்லை, ஏனென்றால் அவர் தமது தேவனை விசுவாசித்தார். 17 ஆக, இன்றிரவு அப்படித்தான் இருக்கிறது, தேவனைப் பார்க்க விரும்பு கிறவர்கள், ஒரு உத்தம இருதயத்தோடு, எல்லாவிதமான அந்நிய உணர்வுகளையும் அகற்றிவிட்டு, தங்கள் அயலார் மீதான எல்லாத் துவேஷத்தையும் அகற்றிவிட்டு, மற்ற சபைகள் மற்றும் மற்ற தனிநபர்கள் மீதும், ஆராதனை முறைகள் மீதும் உள்ள எல்லாத் துவேஷத்தையும் அகற்றிவிட்டு வர வேண்டும். நீங்கள் அந்த உத்தம இருதயத்தோடு வர வேண்டும். "கர்த்தராகிய இயேசுவே, நான் உம்மைப் பார்க்க முடியுமா? இப்போது, நான்...? ...என்னுடைய மூடநம்பிக்கைகளை எல்லாம் அகற்றிவிட்டு, நான் இன்றிரவு கர்த்தராகிய இயேசுவைக் காணத் தேடப்போகிறேன்." இப்போது, உங்கள் ஒவ்வொருவருடைய நோக்கமும் அதுவாகவே இருக்கும் என்று நான் நம்புகிறேன். மேலும் நீங்கள் அந்த வகையான ஒரு நோக்கத்தோடு வந்தால், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இன்றிரவு இங்கு தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்த கடமைப்பட்டிருக்கிறார் என்பதை. 18 இப்போது, அவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவார் என்று அவர் வாக்குத்தத்தம் செய்த பின்பு, கர்த்தராகிய இயேசுவைக் குறித்து நாம் பேசினால் அது மக்களுக்கு எந்தவொரு வினோதமான காரியமாகவும் இருக்காது. நம்மால் அவரைப் பார்க்க முடியாதா? கொஞ்ச காலத்திற்கு முன்பு ஒருவர் சொன்னார், ஒரு சிறு பையன், அவன் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தான். அவன் தன் போதகரிடம் கேட்டான்; அவன் சொன்னான், "யாராவது தேவனைப் பார்க்க முடியுமா?" மேலும் அந்தச் சிறு... போதகர் சொன்னார், "ஏன், ஒருவரும் தேவனைப் பார்க்க முடியாது." "ஒரு மனுஷனும் தேவனைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்று வேதாகமம் சொல்கிறது" என்றார். பின்பு மற்றொன்று... அவன் தன் ஞாயிறு பள்ளி ஆசிரியரிடம் சென்றான், அவனுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியர் சொன்னார், "ஏன், நிச்சயமாக முடியாது மகனே, ஒருவரும் தேவனைக் கண்டு உயிரோடிருக்க முடியாது." மேலும் ஒருவரும் தேவனைப் பார்க்க முடியாது என்று சொல்லி எல்லாரும் அவனைச் சோர்வடையச் செய்தார்கள். ஒருநாள், அவன் ஆற்றுக்குக் கீழே சென்றிருந்தபோது, அவன் ஒரு முதிய மீனவருடன் இருந்தான். அந்த முதிய மீனவர் வானவில்லைப் பார்த்துக்கொண்டிருந்தபடியால் தன் படகை இழுத்துக்கொண்டே அழுது கொண்டிருந்தார். அவன் கேட்டான், "ஐயா, யாராவது தேவனைப் பார்க்க முடியுமா?" அந்த முதிய மீனவர் தேவனால் எந்த அளவுக்கு நிரப்பப்பட்டிருந்தாரென்றால், அவர் சொன்னார், "மகனே, கடந்த முப்பத்தைந்து வருடங்களாக நான் பார்த்தது எல்லாமே, தேவன்தான்." 19 இப்போது, நாமும் தேவனால் மிகவும் நிரப்பப்பட்டு, உலகத்தின் காரியங்களிலிருந்து மிகவும் விலக்கிக் காக்கப்பட்டால், வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும் ஒவ்வொரு அசைவிலும் நாம் தேவனைக் காண முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நாம் உலகத்தின் காரியங்களை எல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவிட்டால்... சில நேரங்களில் நாம் சபைக்கு வருகிறோம், உதாரணமாக, இது போன்ற ஒரு கூட்டத்திற்கு வரும்போது, "இப்போது, நான் அங்கே செல்லப்போகிறேன். அப்படிப்பட்ட காரியங்களை நான் நம்புவதில்லை. நான் அதை நம்பவில்லை, அங்கே ஒன்றுமே இல்லை என்பதை எனக்கு நானே நிரூபிக்கப் போகிறபடியால் நான் அங்கே செல்லப் போகிறேன்" என்று சொல்வார்கள். சரி, நீங்கள் அப்படித்தான் திரும்பி வருவீர்கள், அதே வழியில். நீங்கள் சொல்வீர்கள், "சரி..." ஏனென்றால் சாத்தான் உங்களுக்கு அங்கே இருக்கும் அநேகக் காரியங்களைக் காண்பிப்பான்-மேலும் அங்கே ஒன்றுமே இல்லை என்று அவன் உங்களிடம் சொல்வான். ஆனால் இப்போது, நீங்கள் தேவனைக் கண்டுபிடிக்க வேண்டும் அல்லது தேவனைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்றால், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவார், ஏனென்றால் அவர் அப்படிச் செய்யக் கடமைப் பட்டிருக்கிறார். அது முற்றிலும் சரி, அவர் அதைச் செய்வார். 20 இப்போது, நீங்கள்-இன்றிரவு நீங்கள் அந்த நோக்கத்தோடு வந்தால். நாசரேத்தனாகிய இயேசு யார் என்பதைக் கண்டுபிடிப்போம். கடந்த காலங்களில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை நாம் கண்டுபிடித்தால், ஏன், இன்று அவர் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை நாம்-நாம் அறிந்துகொள்வோம். அது சரியா? அந்த நாட்களில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை நாம்-நாம் அறிந்தால், இன்று அவர் எப்படிப் பட்டவராக இருப்பார் என்பதை நாம் அறிவோம். இப்போது, அந்த நாளில் நாம் அவரைப் பார்த்ததாகக் கற்பனை செய்து, யாராவது அவரை நமக்கு விவரித்து, அவர் ஒரு உயரமான மனிதர், அல்லது ஒரு மெலிந்த மனிதர், அல்லது ஒரு பருமனுள்ள மனிதர், அல்லது அது எப்படியிருந்தாலும் சரி என்று சொன்னால், நாம் அந்த வகையான ஒரு மனிதரையே தேடிக்கொண்டிருப்போம். வேதாகமம் அவருடைய வளர்த்தி எப்படி இருந்தது என்று சொல்லவில்லை. "நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" என்று அவர் சொன்னார். அவர் ஒரு பெரிய, பருமனான, அழகான, உயரமான மனிதராக இருந்திருக்க மாட்டார் என்று நான் கருதுகிறேன், ஏனென்றால், "நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது" என்று வேதவாக்கியம் சொல்லியிருக்கிறது. 21 அப்படியானால், வேதவாக்கியம் அப்படிச் சொல்லியிருந்தால், நாம் அந்த வகையான மனிதரைத் தேட முடியாது. ஆனால் வேதவாக்கியம் அவருடைய வளர்த்தியைத் துல்லியமாகக் கொடுக்கவில்லை. ஆனால் வேதவாக்கியம் அவரை வெளிப்படுத்துகிறது, அவர் தமது வல்லமையிலும் தமது-தமது வெளிப்பாட்டிலும் எப்படிப்பட்டவராக இருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இப்போது, நாம் வேதவாக்கியத்தில் வாசித்து அவர் அப்போது எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், ஏன், அவர் இப்போது எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதை நாம் அறிவோம். அது சரியா? அப்போது அவர் எப்படிப்பட்டவராக இருந்தாரோ, இன்றிரவும் அவர் அப்படியே இருக்கிறார், ஏனென்றால், "அவர் நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவரா யிருக்கிறார்" என்று வேதவாக்கியம் சொல்கிறது. அது சரியா? 22 இப்போது, அப்படிப்பட்ட ஒரு நபரை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தால், கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அந்த நபருக்குள் கிரியை செய்வதை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். இப்போது, இயேசு வெளியே வந்து, மக்கள் முன்பாக, ஒரு பெரிய பெருமையோடும், ஒரு விளம்பரத்தோடும் வந்து, அவர், "இதை என்னிடம் கொண்டு வாருங்கள், அதை என்னிடம் கொண்டு வாருங்கள், அதை வைத்து நான் என்ன செய்ய முடியும் என்பதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்" என்று சொல்லவில்லை. இயேசு அந்த வகையான நபர் அல்ல. அவர் எல்லாத் துதியையும் சர்வவல்லமையுள்ள தேவனுக்கே கொடுத்தார். அவர் சொன்னார், "பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, குமாரன் வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்." தம்மால் என்ன செய்ய முடியும் என்பது குறித்து அவர் ஒருபோதும் ஒரு விளம்பரமும் செய்யவில்லை. வெளிப்படையாகச் சொல்லப் போனால், தேவன் முதலில் தமக்கு என்ன செய்ய வேண்டும் என்று காண்பிக்கும் வரை, தாம் ஒரு காரியத்தையும் செய்யவில்லை என்று சொல்லும் அளவிற்கு அவர் சென்றார். 23 இப்போது, அவர்-அவர் ஒரு தாழ்மையான மனிதராக, துக்கநிறைந்தவராக, பாடு அனுபவித்தவராக இருந்தார். மேலும் அவருடைய கிரியையில் நாம் அவரைக் கவனித்தோம். இப்போது, அவருடைய ஊழியம் முதன்முதலில் தொடங்கியபோது நாம் அவரைப் பார்ப்போம். வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப் பதில் அவர் மிகவும் வெற்றிகரமான வரானார். அநேகக் கிரியைகள் அவருடைய ஊழியத்தைப் பின்தொடர ஆரம்பித்தன. இதில் நாம் காண்கிறோம், அவர், அவ்வப்போது, ஒரு பெரிய குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்தார், அது முழு திரளான ஜனங்களையும் ஆச்சரியப்படச் செய்தது. அநேக நேரங்களில் மக்கள் அவரிடம் வந்தார்கள், மற்றும் அவர்கள்-அவர்களுக்கு ஊழியம் செய்யப்படவில்லை. மக்கள் அவரிடம் வந்து ஆர்வத்தினால் தேடிய அநேக நேரங்கள் இருந்தன, அவர் வெறுமனே அவர்களுடைய ஆர்வத்தை, வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அது அவர்களை ஆட்கொள்ளுகிறது என்று சொல்லி அவர்களைப் போகவிட்டார். யூதர்கள் வந்து, "இப்போது, எங்களுக்காக ஒரு அடையாளத்தைச் செய்யும்" என்றார்கள். மேலும் ஏரோது சொன்னான், "அவரை இங்கே கொண்டுவாருங்கள், அவர் ஒரு அடையாளம் செய்வதை நான் பார்க்கட்டும்." சாத்தான் அவரைச் சந்தித்தான். முதற்காரியமாக, சாத்தான் சந்தித்தான்-அவன் இயேசுவைச் சந்தித்தபோது (பரிசுத்த மத்தேயு 4-ம் அதிகாரத்தில்), அவன் சொன்னான், "நீர் தேவனுடைய குமாரனேயானால்..." "நீர்... ஆனால்", தேவனுடைய வார்த்தையின் மீது ஒரு கேள்விக்குறி. "நீர் தேவனுடைய குமாரனே யானால், எனக்கு முன்பாக இங்கே நீர் ஒரு பகிரங்கமான அற்புதத்தைச் செய்வதை நான் பார்க்கட்டும். நீர் இந்தக் காரியங்களை இங்கேயும், இங்கேயும் செய்வதாக நான் கேள்விப்படுகிறேன்." அதே வகையான ஆவிதான் அவருடைய சொந்த ஊராகிய கலிலேயாவிலுள்ள மக்களிடமும் இருந்தது. "மேலும் அநேகர், அவர்கள் சொன்னார்கள், "கப்பர்நகூமில் நீர் இந்தக் காரியங்களைச் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், மேலும் நீர் அதை இங்கே செய்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது, நீர் அதை இங்கே செய்வதை நாங்கள் பார்க்கட்டும்." மேலும் இயேசு ஆச்சரியப்பட்டார், அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே பலத்த செய்கைகளைச் செய்யக் கூடாதிருந்தது. அது சரியா? அவர் அதைக் குறித்து ஆச்சரியப்பட்டார். பின்பு அவர் சொன்னார், "ஒரு தீர்க்கதரிசி தன் சொந்த ஊரிலேயன்றி வேறெங்கும் கனவீனமடையான்." 24 பின்பு நாம் பார்க்கிறோம் சாத்தான், அவரிடம் சொல்லி, "இப்போது, நீர் தேவனுடைய குமாரனேயானால், எனக்காக இப்போது நீர் ஒரு அற்புதம் செய்வதை நான் பார்க்கட்டும். நான் உமக்குச் செய்ய ஒரு காரியத்தைக் கொடுக்கிறேன், நீர் அதைச் செய்தால், நீர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிப்பேன்" என்று அவ்வளவு வார்த்தைகளில் சொன்னான். "இப்போது, இங்கே-இங்கே நீர்-நீர் பசியாயிருக்கிறீர், இப்போது, இந்தக் கல்லுகளை அப்பங்களாக மாற்றலாம், அதில் எந்தத் தவறும் இல்லை. நீர் அவைகளை அப்பமாக்கி, சாப்பிடும், அங்கே உட்கார்ந்து சாப்பிடும். இந்தக் கல்லுகளை அப்பங்களாக மாற்றும், நான் உம்மை விசுவாசிப்பேன்." ஏன், இயேசு அதைச் செய்திருக்க முடியும், நான் விசுவாசிக்கிறேன். ஆனால் அவர் சொன்னார், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல... என்று எழுதியிருக்கிறதே." சாத்தான் அப்போதுதான் கண்டுகொண்டான், தான் அந்த நேரத்தில் மோசேயைச் சந்திக்கவில்லை என்பதை. அவர் சொன்னார், "மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." எனவே சாத்தான் சொன்னான், "இப்போது, இவர் ஒரு வேதாகம அறிஞர்; தான் எங்கே நிற்கிறோம் என்பது இவருக்குத் தெரிந்தி ருக்கிறது, எனவே நான் இவருக்குச் சில வேதவாக்கியங்களைக் கொடுப்பதே நல்லது." எனவே அவன் அவரை தேவாலயத்தின் உப்பரிகையின் மேல் கொண்டுபோய், "இப்போது, பாரும் நான் உமக்கு வேதவாக்கியத்தைத் சரியாக மேற்கோள் காட்டப் போகிறேன்" என்றான். "'உம்மைக் குறித்துத் தமது தூதர்களுக்குக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக் கொண்டுபோவார்கள்' என்று எழுதியிருக்கிறதே." அவன் சொன்னான், "இப்போது, அது வேதவாக்கியம்." அவன் சொன்னான், "இப்போது, நீர் இங்கிருந்து கீழே குதியும், நீர் தரையை அடைவதற்கு முன்பு, அப்படியே நேராக மேலே திரும்பி வாரும், நான் நீர் தேவனுடைய குமாரன் என்று விசுவாசிப்பேன்." சரி. இயேசு சொன்னார், "ஆம், அது நிச்சயமாகவே எழுதியிருக்கிறது, ஆனால் 'உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக' என்றும் எழுதியிருக்கிறதே." பார்த்தீர்களா? எனவே தன்னை விடச் சற்று அதிகமான ஒரு மாணவனைச் சந்தித்திருக்கிறோம் என்பதை அவன் கண்டுகொண்டான். ஆக இறுதியாக, அவன் அவரை தேவாலயத்தின் உப்பரிகையின் மேலும், வெளியே மலையின் மேலும் கொண்டுபோய், வார்த்தையின் மூலமாக ஒவ்வொரு வழியிலும் அவரைச் சோதிக்க முயன்றான். ஆனால் இயேசு சாத்தானுக்காகக் கோமாளித்தனம் செய்யமாட்டார், இன்னும் அவர் அப்படிச் செய்வதில்லை. 25 அவிசுவாசிகளின் ஆர்வத்தைத் திருப்திப் படுத்துவதற்காக இயேசு குணமாக்குவதில்லை. தமது பிதாவை மகிமைப்படுத்துவதற்காக மட்டுமே இயேசு குணமாக்குகிறார். அவ்வளவுதான். இன்றும் அவர் அப்படிப்பட்ட நபராகவே இருப்பதைக் காண்கிறோம். நீங்கள் அவரைப் பார்க்க யாரையாவது கொண்டு வந்தால், அவர்கள் சொல்கிறார்கள், "நீர் இந்த முடவனை நடக்கச் செய்வதை நான் பார்க்கட்டும், நீர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிப்பேன்." அவர் சொல்வார், "எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே." அதுதான் வார்த்தையாக இருக்கும். "எனக்குப் பின்னாகப் போ, சாத்தானே." மேலும், "அவர் இந்த நபரைக் குணமாக்குவதை நான் பார்க்கட்டும், நான் அதை விசுவாசிப்பேன்" என்று அப்படிப்பட்ட ஆர்வத்தோடு யாராவது சொல்வதை நீங்கள் கேட்கும்போது, அவர்களிடம் என்ன வகையான ஆவி இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள். புரிகிறதா? அதே ஆவிதான் அங்கேயும் இருந்தது. அதே ஆவிதான் அந்த யூதர்களின் மேலும் இருந்தது, அது சொன்னது, "இப்போது, நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கே இந்தச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறீரே, உம்மு டைய கைகளைக் கிழித்துக்கொண்டு வாரும்." வேறு வார்த்தைகளில் சொல்வதானால், "கீழே இறங்கி வாரும், நீர் தேவனுடைய குமாரன் என்று நாங்கள் விசுவாசிப்போம்." அதே ஆவி கிரியை செய்வதைப் பார்க்கிறீர்களா? அது இன்று நவீன-நவீனத்துவ இறையியலின் மூலம் கிரியை செய்வதைப் பார்க்கிறீர்களா? இன்று கிறிஸ்தவம் என்று அழைக்கப்படுகிற ஒன்றின் மூலம் அது கிரியை செய்வதைப் பார்க்கிறீர்களா? "நீர் இதைச் செய்தால்... அவர் இந்தக் குருடனைப் பார்க்கச் செய்வதை நான் பார்க்கட்டும்." 26 இப்போது, நீங்கள் கவனித்தால், தம்மைக் கேட்க வந்த மக்களின் ஆர்வத்தைத் திருப்திப்படுத்துகிற அப்படிப்பட்ட நபராக இயேசு இருக்கவில்லை. ஒருநாள், பெதஸ்தா குளத்தின் வழியே, அல்லது பெதஸ்தா குளத்தின் அருகே அவர் நடந்து சென்றபோது, இயேசு தெளிவாகச் சொன்னார்... நான் பரிசுத்த யோவான், 5-ம் அதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறேன். அவர் பெதஸ்தா குளத்தின் அருகே நடந்து சென்றார், அங்கே திரளான ஜனங்கள்... இப்போது, என்னுடைய புரிதலில் நான் தவறாக இருக்கலாம், ஆனால் அறிஞர்களால் எனக்குச் சொல்லப்பட்டிருக்கிறது, ஒரு திரளான கூட்டத்தை உருவாக்க இரண்டாயிரம் பேர் தேவை, அது... அது பல திரளான கூட்டங்களாக இருந்தது. 27 எனவே இன்றிரவு இங்கு இருப்பதைப் போல இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான மக்கள், முடவர்களாயும், குருடர் களாயும், சப்பாணிகளாயும், சூம்பின உறுப்பு டையவர்களாயும் அங்கே படுத்துக்கொண்டு, தண்ணீர் கலக்கப்படுவதற்குக் காத்திருந்ததை நீங்கள் கற்பனை செய்து பார்க்கலாம். மேலும் தேவனுடைய குமாரனும், தேவன் நம்மோடிருக்கிறார் என்னும் இம்மானு வேலுமாகிய இயேசு, மனித மாம்சத்தில் யெகோவாவின் வெளிப்பாடானவர், இங்கு பூமியில் நடந்து கொண்டிருக்கிறார், தேவன் கிறிஸ்துவுக்குள் உலகத்தைத் தம்மோடு ஒப்புரவாக்கிக்கொண்டு, அந்தக் கூட்டமான வியாதியஸ்தர்கள் நடுவே நடந்து செல்கிறார், அவர்கள் அலறிக்கொண்டும், கெஞ்சிக் கொண்டும் இருக்கிறார்கள்... மேலும்-மேலும் அநேக நேரங்களில் எழுத்தாளர்கள் நம்மிடம் சொல்லியிருக் கிறார்கள், மற்றவர்களுக்கு முன்பாகக் குளத்திற்குள் இறங்க முயற்சிக்கும்போது அவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொண்டார்கள் என்று. மேலும் குணமடை வதற்காக அந்தக் குளத்திற்குள் இறங்க வேண்டும் என்ற அப்படிப்பட்ட ஒரு வேதனை, ஏக்கம், விருப்பம், ஏனென்றால் அது ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே குணமாக்கியது. ஒருவேளை, இன்னொருவர் குணமடைவதற்கு முன்பு அவர்கள் இன்னும் ஒரு மாதம் காத்திருக்க வேண்டியிருக்கலாம். 28 ஆனால் இந்தக் குளத்திற்குள் இறங்க முயற்சிக்கும், அங்கே நடக்கும் இந்த மாபெரும் வேதனையான குழப்பம், முடவர்கள், சப்பாணிகள், குருடர்கள் மற்றும் சூம்பின உறுப்புடைய அந்த மக்கள் கூட்டத்தின் நடுவே இயேசு நடந்து செல்கிறார்... அதுதான் நமது அன்பான கர்த்தர், மனதுருக்கம் நிறைந்தவராக, அந்தக் குருடர்கள், அந்த வியாதியஸ்தர்கள், அலறிக்கொண்டிருக்கும் அந்த மக்கள், அந்த முடவர்கள், அந்தச் சப்பாணிகள், அங்கவீனமான அந்த மக்கள் நடுவே நடந்து சென்றார். கோணலான, மற்றும் பாதிக்கப்பட்ட, மற்றும் குருடான, வேதனைப்படுகிற, பாதி பட்டினியால் சாகக்கிடந்த, நிர்வாணமான அந்த மனிதக்கூட்டம் முழுதும் அங்கே படுத்துக் கொண்டு, அதற்காகக் காத்திருந்தது... மேலும் இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்தவராக, அவர்கள் அனைவரின் நடுவே நடந்து சென்று, ஒரு படுக்கையில் படுத்திருந்த ஒரு மனிதனிடம் சென்றார், அவனுக்கு ஏதோ ஒருவிதமான வியாதி இருந்தது; முப்பத்தெட்டு வருடங்களாக அவனுக்கு அது இருந்தது, ஒருவேளை, சர்க்கரை வியாதியாக, அல்லது காசநோயாக இருக்கலாம், அது வளர்ச்சி குன்றியதாக இருந்தது. அந்த மனிதனிடம் நடந்து சென்று சொன்னார்... இப்போது கவனியுங்கள், இங்கேதான் நீங்கள் வேதவாக்கியத்தைக் கவனிக்க வேண்டும். அந்த மனிதன் அங்கே இருந்தான் என்பதை இயேசு அறிந்திருந்தார், அவன் முப்பத்தெட்டு வருடங்களாக அந்த நிலைமையில் இருந்தான் என்பதையும் அறிந்திருந்தார், அவர் அவனைக் குணமாக்கி விட்டு, தமது வேலையைப் பார்க்கச் சென்றார், முடவர்களாயும், சப்பாணிகளாயும், குருடர் களாயும், சூம்பின உறுப்புடையவர்களாயும் அங்கே படுத்திருந்த அந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரையும் அப்படியே விட்டு விட்டார். 29 இப்போது, இன்றிரவு அது சிகாகோவாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், இங்கே ஓரமாக முழுவதும், ஒருவேளை இருபது, அல்லது முப்பது, அல்லது நாற்பது சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டிருக்கும் என்று சொல்வோம். கூட்டத்திற்கு வரும் சில விமர்சகர்கள் சொல்வார்கள், "பாருங்கள், இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிற அந்த மக்களை நான் பார்க்கட்டும். மேலும் அவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் அப்சா மற்றும் குணமடைந்த இந்த மக்கள் அனைவரும்... மேலும் முடவர்கள், சப்பா ணிகள், குட்டையான கால்கள் நீளமானவைகள், மரித்தவர்கள் எழுப்பப்பட்டவைகள், மற்றும் அது குறித்த மருத்துவரின் அறிக்கைகள், மற்றும் இது போன்ற பல சாட்சிகள் அனைத்தையும் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்... "அவர்கள் கீழே நடந்து சென்று இவர்களைக் குணமாக்குவதை நான் பார்க்கட்டும்" என்று கோருகிறார்கள். இப்போது, அது அந்த நாளில் அந்த மக்களின் மேல் இருந்த அதே ஆவியாகத்தான் இருக்கும். அவர்கள் அதே காரியத்தைத்தான் அறிய விரும்பினார்கள். "அன்பு நிறைந்த, மனதுருக்கம் நிறைந்த இந்த மனிதர் எப்படி அங்கே நடந்து சென்று, அங்கே படுத்திருந்த அந்த மக்கள் அனைவரையும் அப்படியே விட்டுவிட முடியும்?" இப்போது, இயேசு அவர்களுக்குப் பரிசுத்த யோவான், 5-ம் அதிகாரம், 19-ம் வசனத்தில் பதிலளித்தார். கவனியுங்கள், அவர் சொன்னார்: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன் றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; ... அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். அது சரியா? அது நேற்றைய இயேசு என்றால், அதுதான் இன்றைய இயேசு. தேவன் முதலில் என்ன செய்ய வேண்டும் என்று காண்பிக்கிறாரோ அதையன்றி நீங்கள் வேறொன்றும் செய்வதில்லை. இப்போது, இயேசு தெளிவாகச் சொன்னார், "பிதா தமக்குக் காண்பித்ததைக் தவிர அவர் வேறொன்றையும் செய்யவில்லை." 30 இப்போது, ஒருமுறை ஒரு குருடன், எரிகோவின் வாசலில் உட்கார்ந்துகொண்டு, சத்தமிட்டு இரக்கத்துக்காக அலறிக் கொண்டி ருந்தான். திரளான ஜனங்கள், அவர்களில் சிலர், அவரைச் சபித்துக்கொண்டும், அவர்களில் சிலர் அவரைக் கேலி செய்துகொண்டும், அவர்களில் சிலர் அவரைக் கூச்சலிட்டு நிந்தித்துக் கொண்டும், அவர்களில் சிலர் அவரை உற்சாகப்படுத்திக்கொண்டும், மற்றும்-மற்றும் அவர்கள் இந்த வாசலைக் கடந்து சென்றார்கள். மேலும் இந்த ஏழை, குருட்டுப் பிச்சைக்காரனை, அவர்கள் அங்கே அமைதியாக இருக்கச் செய்ய முயற்சித்தபோது, "அவரால் உன்னைக் கேட்க முடியாது" என்றார்கள். அங்குச் சாலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, அது அந்தச் சாலையில்-மிகவும் தூரமான ஒரு தூரம், மேலும் இயேசு கல்வாரியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தார், அவருடைய முகம் கல்வாரியின்மேல் பதிக்கப்பட்டிருந்தது, அவருடைய சிலுவை மரணம் அவருக்குச் சற்று முன்பாகவே இருந்தது. மேலும் இங்கே அவர் இந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கிறார். மேலும் இந்த ஏழைக் குருட்டுப் பிச்சைக்காரன் சுவரோரமாக, மக்களால் பின்னுக்குத் தள்ளப்பட்டான், ஆனால் அவன், "இயேசுவே, எனக்கு இரங்கும். எனக்கு இரங்கும்" என்று கூப்பிட்டு, இரக்கத்திற்காகக் கெஞ்சிக் கொண்டிருந்தான். இப்போது, இயேசுவை அவருடைய வழியில் நிறுத்தியது அந்தப் பிச்சைக்காரனின் சத்தம் அல்ல; இயேசுவை அவருடைய வழியில் நிறுத்தியது அந்தப் பிச்சைக்காரனின் விசுவாசம்தான். அவர் நின்றார், தம்மைச் சுற்றியிருந்த கூட்டத்தாரைப் பார்த்து, "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்-நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?" என்று கேட்டார். அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, "ஆண்டவரே, நான் பார்வை யடைய வேண்டும்" என்றான். அவர் சொன்னார், "உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது." "நான் உன்னைக் குணமாக் கினேன்" என்று அல்ல. "உன் விசுவாசம்." வேறு வார்த்தைகளில் சொல்வதானால், எல்லா மனிதர்களின் பாரங்களோடும், உலகில் இதுவரையிலும் மரித்த அல்லது இனி மரிக்கப்போகும் ஒவ்வொரு மரணத்தோடும் கல்வாரியை நோக்கி அணிவகுத்துச் செல்லும் இயேசுகிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்ள அல்லது அவரை நிறுத்தத் தேவையான அளவு தேவன் மீதான விசுவாசம், கல்வாரியில் அவருடைய முடிவின் மீதே தங்கியிருந்தது. மேலும் அந்தக் காரியங்கள் அவருடைய மனதை அழுத்திக்கொண்டிருக்க, ஒரு திரளான கூட்டத்திற்கு முன்பாக நடத்தப்பட்டு, அவர்கள் பரிகாசம் செய்து, அவரைக் கேலி செய்து மற்றும் எல்லாவற்றையும் செய்துகொண்டிருக்க, ஆசாரியர் அவரைப் பார்த்துக் கத்திக்கொண்டும், அவரைத் தாக்கிக்கொண்டும் இருக்க, அவர் நேராக நடந்து சென்றுகொண்டிருக்கிறார். எலியாவும் எலிசாவும் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு ஒன்றாக நடந்து வந்த அதே சாலை, பல வருடங்களுக்கு முன்பு யோசுவா இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்திச் சென்ற அதே சாலை, அங்கே அந்தப் பழைய கற்களின் மீது அவர்கள் எரிகோவைச் சுற்றி அணிவகுத்துச் சென்று, ஆர்ப்பரித்தபோது, மதில்கள் இடிந்து விழுந்தன. அதே சாலையில்தான் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து, உடனடியாகச் சிலுவையில் அறையப்படுவதற்குக் கல்வாரிக்குச் சென்று கொண்டிருந்தார், ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் விசுவாசம் அவரை அவருடைய வழியில் நிறுத்தியது. அவர் திரும்பி, சுற்றிலும் பார்த்து, "நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்று நீ விரும்புகிறாய்?" என்று கேட்டார். "நான் பார்வையடைய வேண்டும்." அவர் சொன்னார், "உன் விசுவாசம் போதுமானது." மேலும் குருட்டுப் பிச்சைக்காரன் எழுந்து நின்று, "ஓ, அவர் என்னிடம் சொன்னார். அவர் என்னிடம் சொன்னார். அவருக்கு என்னை யார் என்று தெரியாது, ஆனாலும் அங்கே சாலையில் என்னுடைய விசுவாசம் அவரை நிறுத்தியது" என்று சொல்வதை என்னால் பார்க்க முடிகிறது. அவர் அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, திரளான ஜனங்கள் கேலி செய்துகொண்டு செல்வதை என்னால் பார்க்க முடிகிறது. அவன்...? ...சொல்கிறான், "நான் பார்வையடைவேன் என்று எனக்குத் தெரியும்." கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, அவன் பார்க்கத் தொடங்கினான். அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. இதோ அவன் தன் முழு சத்தத்தோடு அவரைத் துதித்துப் பாடிக்கொண்டே, அந்தச் சாலையில் அவரைப் பின்பற்றிச் சென்றான். அதுதான் நேற்றைய இயேசு. அதுதான் இன்றைய இயேசு. 31 ஒருமுறை ஒரு ஸ்திரீ...?...எழுந்து தன் இருதயத்தில், "என்னால் அவரிடம் பேச முடியாது; நான் தகுதியற்றவள். ஆனால் அவருடைய வஸ்திரத்தையாகிலும் நான் தொட்டால், நான் குணமாவேன் என்று விசுவாசிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டாள். அவள் கூட்டத்திற்குள் நழுவிச் சென்று, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் கூட்டத்திற்குள் நழுவி வெளியே நின்றுகொண்டிருந்தாள், அவளுடைய விசுவாசம் இயேசுவைத் தொட்டது. அவர் நின்று, தம்முடைய ஜனங்களைச் சுற்றிலும் பார்த்தார். அவள் அவரைக் கண்டாள்; அவளால் மறைந்திருக்க முடியவில்லை. அவர், "மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது" என்றார். அநேக ஜனங்களின் மத்தியில்-திரளான கூட்டத்தின் மத்தியிலும் தேவனுடைய ஆசீர்வாதங்களை, தேவனுடைய சாட்சியை, தேவனுடைய விருப்பத்தை, தேவகுமாரனின் இருதயத்திலிருந்து இழுத்துக் கொள்ள முடிந்த நேற்றைய இயேசு அவரே. மேலும் இயேசு, "நான் செய்கிறவைகளை நீங்களும் செய்வீர்கள்" என்று சொன்னார். அது சரிதானே? 32 இப்போது, ஒருமுறை ஒரு மனிதன் வருவதை நாம் பார்க்கிறோம், கொஞ்சம் ஆர்வத்துடன், அவனுடைய பெயர் பிலிப்பு, அல்லது அது நாத்தான்வேல். பிலிப்பு போய் அவன் ஒரு மரத்தின் கீழே ஜெபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அவன் நடந்து வந்து, கூட்டத்தில் நின்றான். அவன் வருவதை இயேசு கண்டார், அவன் நடந்து வரும்போது அவனைப் பார்த்து, "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். ஒரு பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பரிசேயர்கள், "இவன் இப்போது பெயெல் செபூலாக இருக்கிறான். இவன் ஒரு குறிசொல்லுகிறவன்" என்றார்கள். பாருங்கள்? "இவன் பிசாசுகளின் தலைவன். பாருங்கள், இவன் ஒரு குறிசொல்லுகிறவன்." அவர், "இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என்றார். இந்த இஸ்ரவேலன், ஒரு உண்மையான மனிதன், திரும்பிப் பார்த்து, "ரபீ, என்னை உமக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்டான். அதற்கு அவர், "பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன்" என்றார். அந்த மனிதன், நாத்தான்வேல், அவரைப் பெயெல்செபூல் என்று அழைக்கும் மனப்பான்மை கொண்டிருக்கவில்லை. அவன் அவர் பாதத்தில் விழுந்து, "நீர் தேவனுடைய குமாரன். நீர் இஸ்ரவேலின் ராஜா" என்றான். 33 ஒரு நாள் கிணற்றண்டையில் ஒரு ஸ்திரீ இருந்தாள், அந்தச் சமயத்தில் இயேசு தம்முடைய சீஷர்களைப் போஜன பதார்த்தங்களை வாங்கும்படி அனுப்பியிருந்தார். அவர்கள் போஜனபதார்த்தங்களை வாங்கப் போயிருந்தபோது, அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது, இயேசு எரிகோவுக்குப் போய்க் கொண்டிருந்தார், அவர் சுற்றி வளைந்த ஒரு வழியில் போய்க்கொண்டிருந்தார். அவர் சமாரியா வழியாகப் போனார், ஏனென்றால் அவர் சமாரியா வழியாய்ப் போக வேண்டியதாயிருந்தது. அது ஏன் என்று நான் யோசிக்கிறேன்? அவர் ஏன் சமாரியாவுக்குப் போனார் என்று யோசிக்கிறீர்களா? தம்முடைய சீஷர்களை அனுப்பி விட்டு, அவர் அங்கே உட்கார்ந் திருந்தார், அப்போது ஒரு ஸ்திரீ வெளியே வந்தாள்; இயேசு, "பிதாவானவர் எனக்குக் காண்பிக்கிறதையே அன்றி நான் ஒன்றும் செய்கிறதில்லை" என்று சொன்னார். அவர் அங்கே போகும்படி தேவன் அவருக்குக் காண்பித்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? அவர் அங்கே உட்கார்ந்திருந்தார். அந்த ஸ்திரீ வந்தாள். இப்போது, பிதா தம்மை எங்கே இருக்கச் சித்தமாயிருந்தாரோ அங்கேதான் தாம் இருக்கிறோம் என்பது இயேசுவுக்குத் தெரியும். ஆனால் இப்போது இந்த ஸ்திரீயைக் குறித்து என்ன? இப்போது, நேற்றைய இயேசுவை நாம் காணப்போகிறோம். அவள் தண்ணீர் மொள்ள வந்தாள், அந்த ஸ்திரீயே அவள் என்று ஆவியானவர் இயேசுவுக்குச் சாட்சியளித்தார். எனவே அவர், "எனக்குக் குடிக்கத்தா" என்றார். அதற்கு அவள், "சமாரியராகிய எங்களுடன் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்வது யூதர்களாகிய உங்களுக்கு வழக்கமில்லையே" என்றாள். அவர், "உன்னுடன் பேசுகிறவர் யார் என்று உனக்குத் தெரிந்திருந்தால், நீயே என்னிடத்தில் குடிக்கக் கேட்டிருப்பாய்" என்றார். அவள், "கிணறு ஆழமாயிருக்கிறதே" என்றாள். இயேசு அவளுடைய ஆவியைப் பிடிக்கும் வரை அந்த உரையாடல் தொடர்ந்தது. அவர், "போய் உன் புருஷனை அழைத்துக்கொண்டுவா" என்றார். அவள், "எனக்கு புருஷன் இல்லை" என்றாள். அவர், "அது சரிதான். உனக்கு ஐந்து புருஷர்கள் இருந்தார்கள், இப்போது உனக்கு இருக்கிறவன் உன் புருஷன் அல்ல" என்றார். "ஆண்டவரே," என்று அவள் சொன்னாள், "நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்." அவள் ஊருக்குள் சென்று மனுஷரை நோக்கி, "நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒரு மனுஷனை வந்து பாருங்கள். இவர் கிறிஸ்துதானோ?" என்றாள். அது நேற்றைய இயேசு. அது இன்றைய இயேசு. அதே இயேசுதான் அவர். இயேசு, "நான் செய்கிற இந்தக் காரியங்களை, நீங்களும் செய்வீர்கள்" என்றார். 34 ஒருமுறை ஒரு மனிதன் வந்தான், முரட்டுத்தனமான தோற்றமுள்ள ஒரு மீனவன், அவனுக்கு நிறைய தைரியம் இருந்திருக்கலாம். அவனுடைய எழுத்துக்களை வைத்து நீங்கள் சொல்லலாம், அல்லது அவனால் தன் சொந்த பெயரைக் கூட எழுத முடியாமல் இருந்திருக்கலாம். அவன் படிக்காதவனாக இருந்தான். அவன் பெயர் சீமோன் பேதுரு. அவன் கூட்டத்திற்கு வந்தான், இயேசு அவனுடைய படகை அல்லது அதுபோன்ற ஒன்றை இரவலாகக் கேட்ட பிறகு, அவன் உள்ளே வந்தான், அவர், "உன்-உன் பெயர் சீமோன், ஆனால் இனிமேல் நீ 'பேதுரு' என்று அழைக்கப்படுவாய், அதற்கு 'சிறிய கல்' என்று அர்த்தம்" என்றார். அவனுடைய பெயர் அவருக்கு எப்படித் தெரியும்? அது நேற்றைய இயேசு. அதுதான் இன்றைய இயேசுவும். 35 அன்றைய சபையில் இயேசுவுக்கும் இன்றைய சபையில் அவருக்குமுள்ள வித்தியாசம் என்னவென்று பாருங்கள். அவர் அவர்களுக்கு-தாம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்த ஒரு அதிகாரமுடையவராகப் போதித்தார். இன்று நாம், "சரி, அது அப்படியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வியாதியஸ்தர்களைக் குணமாக் கினார்கள் என்று நான் இங்கே வாசிக்கிறேன், ஆனால் அது சரியா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை" என்று பேசுவதைப்போல பேசுகிறோம். இயேசு அப்படியல்ல, தாம் எங்கே நிற்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். தம்முடைய அதிகாரம் என்னவென்று அவருக்குத் தெரியும். தேவன் தமது வார்த்தையைக் காத்துக்கொள்வார் என்று அவருக்குத் தெரியும். அவர் அவர்களைப் பார்த்து, "இந்தக் கூடாரத்தை இடித்துப் போடுங்கள், அல்லது இந்த... இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், நான் மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்" என்றார். வேதாகமத்திலுள்ள ஒரு வேதவாக்கியம், ஒரு வேதவாக்கியம் அதைக் குறிக்கிறது என்பதையும், தாவீது என்னும் தீர்க்கதரிசி அப்படிச் சொல்லியிருக்கிறார் என்பதையும் அறிந்து, அவர் தம்முடைய சரீரத்தைக் குறித்தே பேசினார். தாவீது, "கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; நான் அசைக்கப் படுவதில்லை. என் மாம்சமும் நம்பிக்கை யோடே தங்கியிருக்கும். என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்" என்று சொன்னார். 36 எழுபத்திரண்டு மணி நேரத்திற்குள் மனித சரீரம் அழியத் தொடங்கும் என்பதை அறிந்திருந்த இயேசு... இப்போது, கிறிஸ்தவர்களே, அவர் ஏன் வெள்ளிக்கிழமை மதியம் மரித்தார், பின்னர் மூன்று பகலும் மூன்று இரவும் இருந்தார் என்று நீங்கள் சிலசமயம் ஆச்சரியப்படுவது இங்கேதான். அவர் வெள்ளிக்கிழமை மதியம் மரித்தார், சனிக்கிழமை காலையில் உயிர்த்தெழுந்தார். மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்குள், தம்முடைய சரீரத்தில் உள்ள செல்கள் உடைந்துவிடும் என்று இயேசுவுக்குத் தெரியும். அவர் வீங்கத் தொடங்கிவிடுவார். ஆனால் தாவீது... ஓ, என் தேவனே, நான்-நான் விரும்புகிறேன்-எப்படியாவது, இதை ஆரம்பத்திலேயே, மக்களின் இருதயத்தில் வைக்க முடிந்தால் நன்றாக இருக்கும். தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது என்று இயேசுவுக்குத் தெரியும். அது தவற முடியாது. இயேசு, "நீங்கள் இந்தச் சரீரத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாட்களுக்குள், நான் இதை மீண்டும் எழுப்புவேன்" என்றார். ஏனென்றால் வேதாகமத்தில் உள்ள ஒரு வேத வாக்கியம், "என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர் (அவர் மரித்தபோது நம்முடைய பாவங்களுடன் பாதாளத்தில் இறங்கினார்), உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காண வொட்டீர்" என்று சொல்லியிருந்தது. அந்த மூன்று பகல் மற்றும் இரவுகளுக்குள் ஏதோ ஒரு நேரத்தில், தேவன் தம்மை மீண்டும் எழுப்புவார் என்பது இயேசுவுக்குத் தெரியும். அவர் மரித்தார், தேவனுடைய வார்த்தையை நம்புவதற்கு அவர் பயப்படவில்லை, "மூன்று பகல் மற்றும் இரவுகளில் நான் மீண்டும் உயிர்த்தெழுவேன்" என்று சொன்னார். 37 ஓ, நாம் இன்றிரவு, வேதாகமத்தில் தெய்வீக சுகப்படுத்துதலைக் குறித்த அறுநூறுக்கும் மேற்பட்ட வாக்குத்தத்தங்கள் இருக்கும்போது, நம்முடைய சுகத்திற்காக அந்த அறுநூறுக்கும் மேற்பட்ட வாக்குத்தத்தங்களை நம்புவதற்குப் பயப்படுகிறோம். அது நேற்றைய இயேசு. தேவனை அவருடைய வார்த்தையின்படி விசுவாசிக்கிற அதுதான் இன்றைய இயேசு. அவர் தம்முடைய ஜனங்களின் மத்தியில் நின்றார், அவர் அறிந்தார்-அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொண்டார். அது சரிதானே? அவர் அவர்களுடைய சிந்தனைகளை அறிந்துகொண்டார். 38 இப்போது, கிறிஸ்தவர்களே, பலமுறை, குறிப்பாக அமெரிக்காவில், என்னுடைய ஊழியம் தவறாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால்தான், உலகம் முழுவதும் பத்து வருடங்களுக்குப் பிறகு... அமெரிக்காவில் பிரசங்கிப்பதற்கும் வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பதற்கும் மட்டுமே என் ஊழியத்தை நான் சுருக்கிக்கொள்கிறேன் என்று பரிசுத்த ஆவியானவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். வெளிநாடுகளில், இது வித்தியாசமாக இருக்கும். வெளிநாடுகளில், பரிசுத்த ஆவியானவரின் வெளிப்பாடு செய்யப்பட்டபோது, ஒரு பிரசங்கம்-அல்லது இது போன்ற வார்த்தைகள் மக்களுக்குப் பிரசங்கிக்கப்பட்டபோது, புறஜாதிகளின் ஒரே ஒரு பீட அழைப்பில் முப்பதாயிரம் பேர் இயேசுவிடம் வந்தார்கள். வலது கைக்கும் இடது கைக்கும் வித்தியாசம் தெரியாத அவர்களில் அநேகர், ஆப்பிரிக்காவில் இப்போது வாரத்திற்கு ஆயிரக்கணக்கானோரை கிறிஸ்துவிடம் கொண்டு வருகிறார்கள். நற்செய்தி உலகமெங்கும் அப் படித் தான் பரவிக்கொண்டிருக்கிறது. நற்செய்தி என்பது பரிசுத்த ஆவியானவரின் வல்லமையின் விளக்கக்காட்சியாகும், அல்லது பரிசுத்த ஆவியா னவரின் வல்லமையை வெளிப்படுத்துவதாகும். 39 இப்போது, நேற்றைய இயேசுவே இன்றைக்கும் இருக்கிறார் என்றால், அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருக்கிறார் என்றால், இது இதில் எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறிய கட்டுக்கதை என்று கிறிஸ்தவ விசுவாசிகளாகிய நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அல்லது இது சத்தியமா? இப்போது, இது ஒன்று சத்தியம் அல்லது இது ஒரு பொய். உங்களால் இதை வைத்து விளையாட முடியாது. இப்போது, நீங்கள் இதைச் சத்தியம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது இது ஒரு பொய் என்று சொல்லி தூக்கி எறிந்துவிடுங்கள். என்னைப் பொறுத்தவரை, ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், அதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும். இதில் உள்ள எந்த வார்த்தைக்கும், அல்லது இதற்கு முரணான எந்த காரியத்திற்கும் சவால் விட நான் பயப்பட மாட்டேன், ஏனென்றால் இது ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை, இது ஒருபோதும் தவறாது அல்லது ஒழிந்துபோகாது. ஒவ்வொரு வார்த்தையும் நிறைவேறும். இது சத்தியமானால், இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்திருந்தால், "இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள். உலகத்தின் முடிவுபரியந்தமும் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட, உங்களுக்குள்ளேயும் இருப்பேன்" என்று சொல்லியிருக்கிறார்... எழுத்தாளர் திரும்பி, "இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும், என்றென்றைக்கும் மாறாதவராயிருக்கிறார்" என்று சொல்லுகிறார். அப்படியானால், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, இந்தக் கடைசி நாளில் வந்து, இந்தப் புத்தகத்தில் அவர் எப்படி இருந்தாரோ அதே விதமாகத் தம்மை வெளிப்படுத்தினால், அதே கர்த்தராகிய இயேசு, அதே வல்லமையின் மூலமாக, அதே வெளிப்பாட்டின் மூலமாக, அதே காரியங்களைச் செய்தால், அவரை நீங்கள் மேசியாவாகவும் இரட்சகராகவும் ஏற்றுக் கொள்வீர்களா? என் கிறிஸ்தவ நண்பரே, கர்த்தர் அதை உங்களுக்குக் கட்டளையிடுவாராக. 40 ஓ, சிகாகோ, சிகாகோ, உனக்கு எத்தனை முறை எழுப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மூடி (Moody) இங்கே இருந்ததிலிருந்து உங்களுக்கு ஒரு எழுப்புதல் ஏற்படவில்லை, ஒரு மகத்தான எழுப்புதல். தேவனே, இது மற்றொரு மூடி எழுப்புதலின் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், சிகாகோவை உலுக்கக்கூடிய, அதைவிடப் பலமடங்கு வல்லமையானதாக இருக்க வேண்டும். இன்றிரவு இங்கு வந்திருக்கும் மக்களாகிய நீங்கள், நம்முடைய அன்பான கர்த்தராகிய இயேசு வந்து தம்மை வெளிப்படுத்துவாரானால், அவர் அவ்வாறு செய்வார் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் அவருடைய வார்த்தைகளைப் பார்த்த பிறகும், அறிந்த பிறகும், ஆராய்ந்த பிறகும், ஏதோ ஒரு பெரிய மயக்கும் வார்த்தைகள் மூலமாக அல்ல, ஆனால் உங்கள் முன் கொண்டுவரப்பட்ட நிர்வாணமான வார்த்தையின் எளிமையின் மூலமாக, இன்றிரவு முதல் சிகாகோவிற்குத் தனிநபர்களாக நீங்கள் பொறுப்பாவீர்கள். இப்போது, மூடநம்பிக்கைகளை உடைக்க, பிசாசை தோற்கடிக்கும் இடத்திற்குச் செல்ல, அவருடைய வல்லமையின் வெளிப்பாடுகள் அறியப்படுவதை நீங்கள் காணும்போது, உங்களில் சிலர் சென்று, "சரி, அது ஒரு-பிசாசினால் ஆனது" என்று சொல்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியானவரைத் தூஷிக்கிறீர்கள் என்பதை உணருகிறீர்களா? இந்த உலகத்திலாவது வருங்காலத்திலாவது அதற்கு ஒருபோதும் மன்னிப்பு இல்லை என்பதை உணருகிறீர்களா? எபிரெயர் 10-ம் அதிகாரத்தில் வேதாகமம் கூறுகிறது, "சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களுக்காகச் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராது." எபிரெயர் 10:47 என்று நான் நம்புகிறேன். "இனியிராது-மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிற வர்களாயிருந்தால்." பாவம் என்றால் என்ன? பாவம் என்பது அவிசுவாசம். பாவத்திற்கு வேறு எந்த பதிலும் இல்லை. 41 குடிப்பது, புகைபிடிப்பது, சூதாடுவது, தீய காரியங்களைச் செய்வது, அது பாவம் அல்ல; அது அவிசுவாசத்தின் குணாதிசயங்கள். நீங்கள் ஒரு அவிசுவாசியாக இருப்பதால்தான் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். நீங்கள் ஒரு விசுவாசியாக இருந்தால், நீங்கள் அந்தக் காரியங்களைச் செய்யமாட்டீர்கள். அது சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, பொறுமை, பரிசுத்தம் ஆகிய கனிகளைத் தருகிறது. அது ஆவியின் கனிகள். ஆனால் பொல்லாத ஆவியின் கனிகள் சந்தேகம். "விசுவாசியாத வனோ ஆக்கினைத்தீர்ப்புக்குட் பட்டாயிற்று." அப்படியானால், சத்தியம் உங்களுக்கு ஒரு அறிவு வரும்படியாக வந்து, பிறகு நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், உங்கள் பாவத்திற்கு இனி வேறொரு பலி இல்லை, நியாயத்தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் பயங்க ரமான எதிர்பார்ப்பே இருக்கும். இன்றிரவு இந்தக் கூட்டத்தில், அல்லது உலகில் வேறு எங்கும் அப்படிப்பட்ட ஒரு நபர்கூட இருக்கக்கூடாது என்பது என்னுடைய ஜெபமாக இருக்கும், தேவன் இரக்கமா யிருப்பாராக. 42 கடைசி நாட்களில், ஆவிகளின் இந்த யுத்தம் வரும்போது என்பதை நீங்கள் உணருகிறீர்களா... நான் இதைச் சொல்லப் போவதில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவர் இப்போது என்னை வற்புறுத்துகிறார். கடைசி நாட்களில், இரண்டு ஆவிகளுக்கும் இடையே இறுதிப் போராட்டம் நடக்கும்போது, அது சபைகளின் சில கோட்பாடுகள் அல்லது அது போன்ற ஒன்றின் மூலமாக நடக்காது என்று வேதாகமம் போதிக்கிறது என்பதை நீங்கள் உணருகிறீர்களா? "அந்த இரண்டு ஆவிகளும், சாத்தியமானால் தெரிந்து கொள்ளப் பட்டவர்களையும் வஞ்சிக்கும்படியாக அவ்வ ளவு நெருக்கமாக இருக்கும்" என்று வேதாகமம் கூறுகிறது. யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல, விசுவாசத்தைக் குறித்துக் கேடான சிந்தையுள்ள இந்த மனிதர்களும் எப்படித் தேவனுடைய ஆவிக்குக் கடைசி நாட்களில் எதிர்த்து நிற்க முயலுகிறார்கள் என்று போதிக்கப்பட்டதை நீங்கள் உணர்ந்தீர்களா? நாம் அந்த நாளில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 43 இப்போது, இங்கே ஒரு அடையாளம் இருந்தது. எகிப்தில் சுகமாக்கும் அற்புதத்தைச் செய்யும்படி தேவன் மோசேக்குச் சொன்னார். அவர்கள் எல்லாவிதமான மாயவித்தைகளையும் செய்ய முடிந்தது, அந்த மந்திரவாதிகளால் முடிந்தது. அவர்கள் தங்கள்... மோசே பேன்களை வரவழைப்பான்; அவர்களும் பேன்களை வரவழைப்பார்கள். மோசே ஈக்களை வரவழைப்பான்; அவர்களும் ஈக்களை வரவழைப்பார்கள். மோசே ஒரு காரியத்தை வரவழைப்பான்; அவர்கள் அதே காரியத்தை வரவழைப்பார்கள். ஆனால் அவர்களால் அதை அகற்ற முடியவில்லை. அவர்களால் ஒரு சாபத்தைக் கொண்டுவர முடிந்தது, ஆனால் அவர்களால் ஒரு சாபத்தை அகற்ற முடியவில்லை. அவன் கொப்புளங்களை வரவழைத்தபோது, அவைகள் அவர்கள்மேலும் உண்டாயின, அவர்களால் தங்களைச் சுகமாக்கிக்கொள்ள முடியவில்லை. தேவனுடைய அடையாளம் தெய்வீக சுகப்படுத்துதல் என்பதை நீங்கள் காண்கிறீர்களா? தேவனுடைய முதல் நாமம்-முதன்முதலில் வெளிப்பட்ட வார்த்தை, வியாதியையும் மற்ற காரியங்களையும் அவர்களை விட்டு அகற்றி, "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" என்பதாகும்-யெகோவா-யீரே, அல்லது யெகோ வா-ரஃபா. "யெகோவா-யீரே" என்றால் "ஏற்படுத்தப் பட்ட பலி", மேலும் "ரஃபா" என்றால் "உன்னைக் குணமாக்கும் கர்த்தர்". தேவனே பரிகாரி. சாத்தானால் குணமாக்க முடியாது. அற்புதங்களையும் அடையாளங்களையும், ஆவிக்குரிய மண்டலத்தில் அதனுடன் இணைந்த வேறு சில காரியங்களையும் நீங்கள் காணும்போது, மக்களின் சிந்தனைகளை அறிந்து கொள்வது போல, உடனடியாக, மறுபடியும் பிறவாத இருதயம், "ஆவியுலகத்தொடர்பு" என்று கூறுகிறது. ஆனால் சுகமளிக்கும் அந்த ஆவியையும், தேவனுடைய ஆசீர்வாதங்களையும் பின் தொடரும் அடையாளத்தை நீங்கள் காணும் போது, அது தேவனிடமிருந்து வருகிறது என்பதை நீங்கள் உணருகிறீர்கள். அதைத் தவறாக மதிப்பிடாதீர்கள். தேவனைச் சரியாக மதிப்பிடுங்கள். இன்றிரவு, கர்த்தராகிய இயேசு, இந்த அரங்கத்தில் தமது உயிர்த்தெழுந்த வல்லமையுடன் வெளிப்படுவாராக. அவருடைய கண்களில் நான் கிருபை பெற்றிருந்தால், இரக்கத்தினாலும், கிருபையினாலும் மட்டுமே, தகுதியில்லாத, மிகவும் தகுதியற்ற நான், இன்றிரவு, இப்போது நடக்கப்போகும் இந்த ஆராதனைக்காகவும், இனி வரப்போகும் ஆராதனைக்காகவும் என்னையே அவருக்கு ஒப்புக் கொடுக்கிறேன், அவருடைய ஆராத னைக்காக என்னையே நான் ஒப்புக் கொடுக்கும்போது, இந்தத் தகுதியற்ற நபரிலிருந்து அவர் ஏதாவது மகிமையைப் பெற முடியுமானால், இன்றிரவு அவர் அப்படிச் செய்வாராக. 44 இங்குள்ள ஒவ்வொரு இருதயமும், அவருக்கு மிகவும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன், அதன்மூலம் அவர் உங்களிடமிருந்து மகிமையைப் பெறுவார். மேலும் இது தெரியப்படுத்தப்படட்டும், ஒவ்வொரு நபரும், நீங்கள் எங்கெல்லாம் முடிகிறதோ, அங்கெல்லாம் சென்று வியாதி யஸ்தர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சிகாகோவில் நடைபெறும் இந்த இறுதி சுகமளிக்கும் ஆராதனைக்குக் கொண்டு வாருங்கள். எனக்கு இன்னும் ஒரு கூட்டம் கலிபோர்னியாவிலும், ஒன்று நியூயார்க்கிலும் இருக்கிறது, கர்த்தர் வேறு ஏதாவது வெளிப்படுத்தும்வரை இது இந்தக் கூட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும். இப்போது, தண்ணீர் கலக்கப்பட்டிருக்கும் போது, நாம் உள்ளே இறங்குவோம். இப்போது, இந்த உரையாடலின் தொடக்கத்தில் நான் உங்களிடம் கேட்டேன், நீங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறீர்களா என்று... அந்த நாளில் அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதை விளக்க நான் முயற்சி செய்தேன். அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன், வேத வாக்கியமும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது. 45 இப்போது, அவர் நேற்றும் இன்றும் என்றென்றைக்கும் மாறாதவராயிருந்து, மரித்தோ ரிலிருந்து உயிர்த்தெழுந்து, தமது சபையில் ஜீவிக்கிறவரானால், அவர், "நான் செய்கிற இந்தக் காரியங்களை நீங்களும் செய்வீர்கள்" என்று சொன்னார்... அது சரிதானே? ஏனென்றால் அவர் பிதாவினிடத்திற்குப் போய்க்கொண்டிருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர், "நான் தேவனி டத்திலிருந்து வந்தேன்; நான் தேவனிடத்திற்குப் போகிறேன்" என்றார். இயேசு யெகோவா தேவனேயன்றி வேறொருவரும் அல்ல. உலகத்தின் பாவத்தை நீக்குவதற்காக தேவ குமாரனாக மனித மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய தேவன் அவரே. அவர் சர்வ வல்லமையுள்ள தேவன். இன்று பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசமாயிருப்பது போல, தேவன் அவருக்குள் வாசமாயிருந்தார். தேவகுமாரன் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார், இன்று தேவனுடைய ஊழியக்காரனும் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறான். அது சரிதானே? பின்னர், இப்போது, இயேசு தாமே ஒன்றும் செய்யவில்லை என்று சொன்னால்... இப்போது, யோவான் 5, மீண்டும் 19. "மெய்யாகவே மெய் யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் தமக்குக் காண்பிக்கிறதைக் குமாரன் செய்கிறாரே அல்லாமல், தாமாகவே ஒன்றும் செய்யமாட்டார்." அப்படியானால், தேவன் முதலில் அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்ற தரிசனத்தைக் கொடுக்கும்வரை, இயேசு எந்த அற்புதங்களையும் செய்யவில்லை. அது உண்மையா? பிதாவானவர் அவருக்குக் காண்பித்தவுடன்... 46 இப்போது பாருங்கள், அவர் லாசருவின் வீட்டை விட்டுச் சென்றபோது. லாசரு வியாதிப்பட்டான். இயேசு அதை அறிந்திருந்தார், அவர் அவனுடைய வியாதிக்குச் சற்று முன்பாக, அந்த வீட்டை, தம்முடைய நண்பர்களை விட்டுவிட்டுச் சென்றார். ஏன்? பிதா அவருக்கு அப்படிச் சொன்னார். அவர் இரண்டு மூன்று நாட்கள் வெளியே சென்றார், லாசரு மிகவும் வியாதிப்பட்டான். அவர்கள் அவரை அழைத்தனுப்பினார்கள். அவர் திரும்பிச் செல்லவில்லை. அவர் தொடர்ந்து சென்றார். ஏன் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? மீண்டும் ஆள் அனுப்பினார்கள், அவர் தொடர்ந்து சென்றார். பின்பு அவர் திரும்பினார்; தரிசனத்தின்படி, நேரம் நிறைவேறிவிட்டது என்பதை அவர் அறிந்திருந்தார். அவர், "நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான் (மரித்துப்போனான்). உங்கள்நிமித்தம் நான் அங்கே இராததைக் குறித்துச் சந்தோஷப்படுகிறேன்," என்றார். ஏனென்றால் அவர்கள், "ஓ, ஆண்டவரே, வந்து அவனை குணமாக்கும். வந்து அவனை குணமாக்கும்" என்று சொல்லிக் கொண்டி ருந்தார்கள். ஆனால் இயேசு சென்றிருக்க மாட்டார். அவர் வெறுமனே சென்றுவிட்டார். அவர் சொன்னார், "உங்கள்நிமித்தம் நான் அங்கே இராததைக் குறித்துச் சந்தோஷப் படுகிறேன். (ஆனால் கவனியுங்கள்.) அவனை எழுப்பப்போகிறேன்" என்றார். 47 கவனியுங்கள், கல்லறைக்கு வந்து, அவர் அங்கே நின்றபோது; இந்த மனிதன் மரித்து, அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்கள் ஆகிவிட்டன. அவர், "பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்த ரிக்கிறேன்" என்றார். என்ன நடக்கப்போகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். தேவன் ஏற்கனவே அவருக்குக் காண்பித்திருந்தார், "இந்த இடத்தை விட்டு விலகிச் செல். இப்போது மூன்று நாட்களுக்குப் பிறகு, அவன் மரிக்கப்போகிறான், அவன் நான்கு நாட்கள் பூமியில் கிடக்கட்டும், பின்பு நீ மீண்டும் அந்த இடத்திற்கு அழைக்கப்படுவாய்." ஏனெனில் அவர், "பிதா எனக்குக் காண்பிக்கிறதைக் கண்டாலொழிய நான் ஒன்றும் செய்கிறதில்லை" என்று கூறினார். பின்பு அவர், "பிதாவே, நீர் எனக்கு ஏற்கனவே செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். நீர் அறிவீர். ஆனாலும் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள்..." என்று ஒரு உதாரணமாகச் சொன்னார். 48 அவருடைய ஞானஸ்நானத்தைப் போலவே, அவர் ஞானஸ்நானம் பெற வேண்டி யதில்லை. அவர் தேவனுடைய குமாரன், ஆனால் அவர் அதை ஒரு உதாரணமாகச் செய்தார். அவர் சீஷர்களின் பாதங்களைக் கழுவ வேண்டியதில்லை, அவர் பரலோகத்தின் தேவன். ஆனால் அவர் அதை ஒரு உதாரணமாகச் செய்தார். அவர் சொன்னார், "சூழ்ந்துநிற்கும் ஜனங்கள்... இதைச் சொன்னேன்." பின்பு அவர், "லாசருவே, வெளியே வா" என்றார். நான்கு நாட்கள் மரித்திருந்த ஒரு மனிதன், தன் கால்களில் நின்று மீண்டும் உயிரோடு வந்தான். பார்த்தீர்களா? ஏன்-அந்த நேரத்தில் எருசலேமில் மரித்த எல்லா மக்களையும் அவர் ஏன் உயிரோடு எழுப்பவில்லை? அவர் மூவரை எழுப்பினார். மூன்று என்பது ஒரு சாட்சி அல்லது உறுதிப்படுத்தல். "மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் சகல காரியங்களும் நிலை வரப்படும்." அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து எழுப்பினார். அவர் விதவையின் மகனைக் கல்லறையிலிருந்து எழுப்பினார், மேலும் அவர் யவீருவின் மகளை மரித்தோரிலிருந்து எழுப்பினார். அவர் தேவனுடைய குமாரன் என்பதற்குச் சாட்சியாக மரித்தோரிலிருந்து மூன்று நபர்களை எழுப்பினார். இப்போது, விமர்சகர்கள் சொல்வார்கள், "அவர் ஏன் எழுப்பவில்லை... அவர் தேவனுடைய குமாரனாக இருந்தால், அவர் ஏன் கல்லறைத் தோட்டத்திற்குச் சென்று, 'கல்லறையில் உள்ள மக்களே, எல்லாரும் வெளியே வாருங்கள்' என்று சொல்லக்கூடாது?". பிதா அவருக்கு அப்படிச் சொல்லியிருந்தால், அவரால் அதைச் செய்திருக்க முடியும். ஆனால் பிதா அவருக்குக் காண்பித்ததை மட்டுமே செய்தார், அவர் பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். 49 இயேசுவைப் பின்தொடர்ந்த அதே அடையாளங்கள், என்ன செய்ய வேண்டும், அதை எப்படிச் செய்ய வேண்டும் என்று அவருக்குச் சொல்லும் தரிசனங்கள், இயேசு அதைச் செய்தார், மேலும் உலகம் எப்படி வேண்டுமானாலும் கூச்சலிட்டாலும், அவர் பிதாவின் காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். அதே இயேசு இன்றிரவு இங்கே இருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? அவர் அந்த விதத்தில் தம்மை வெளிப்படுத்தினால், உங்கள் மனதிலிருந்து எல்லா சந்தேகங்களையும் நீக்கிவிட்டு, இன்றிரவு இங்கிருந்து சென்று, பாவிகள் வந்து இரட்சிக்கப்படவும், வியாதியுள்ள மக்கள் குணமடையவும் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்களா? அவர் வந்தால், இப்போது கேட்டுக்கொண்டிருக்கிற அவர், அவர் வந்து தம்மை வெளிப்படுத்தினால்? உங்கள் கைகளைப் பார்ப்போம். அப்படித் தான். மேலே சென்று சொல்லுங்கள், "நான் செய்வேன், சகோதரரே, இயேசு மரித்தோரி லிருந்து உயிர்த்தெழுந்தார் என்றும், நாம்-சும்மா-நீங்கள்-நாம் அவரைக் கண்டோம், அவருடைய இருப்பின் வெளிப்பாட்டில் அவரைக் கண்டோம் என்று மக்களிடம் சென்று சொல்ல என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்." 50 இப்போது, மக்கள் உங்களில் மட்டுமே இயேசுவைக் காண முடியும். நீங்கள் செய்யும் விதம், நீங்கள் நடந்துகொள்ளும் விதம், நீங்கள் வாழும் விதம், இவற்றின் மூலமாகவே மக்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்கிறார்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது, இந்தக் கூட்டத்தின் நேரத்தில் நம்மைக் காத்து, நம்மை நிலைநிறுத்தி, நம்முடைய நரம்புகளை அமைதியாக வைத்திருக்க வல்லவராயிருக்கிற அவர், இன்றிரவு, உங்கள் அனைவரின் மீதும் தமது மாபெரும் பாதுகாப்பின் சிறகுகளை விரிப்பாராக. சில நேரங்களில் ஆவிகள் விலகிச் செல்கின்றன. சில நேரங்களில் அவை முன்னிலையில் வரும்போது மேடையில் துள்ளிக் குதிக்கின்றன. பரிசுத்த ஆவியானவர் ஆட்கொண்ட பிறகு, இங்கு முன்னோக்கி வரும் மக்களின் முகத்தில் உள்ள பாவனையை கவனியுங்கள். அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று கவனியுங்கள். பின்பு சில நேரங்களில் ஆவிக்குள், சில நேரங்களில் அவர்கள் கீழே விழுகிறார்கள், மேலும் பலவிதமாக நடந்துகொள்கிறார்கள், நான் சொல்வது, குறிப்பாக வலிப்பு நோயைப் போல. எனவே, சில நேரங்களில் அவர்கள் வரும்போதுதான், இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான வலிப்பு அவர்களுக்கு ஏற்படுகிறது. அது வேதத்திற்குப் புறம்பானது அல்ல. அது வேதப்பூர்வமானது. வேதம் அதைத்தான் சொல்கிறது. பின்பு, நீங்கள் வேதத்தை இப்படி வாசிக்கிறீர்களா? நீங்கள் அதை அப்படி வாசிக்கிறீர்களா? அப்படி என்றால், "ஆமென்" என்று சொல்லுங்கள். [சபையார், ஆமென் என்கிறார்கள்] அது சரிதான். வலிப்பு நோயுள்ளவன் இயேசுவிடம் கொண்டுவரப்பட்டபோது, அவனுக்கு இதுவரை இல்லாத அளவுக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டது. ஆனால் இயேசு அவனை ஒரு மரித்த மனிதனைப் போல தூக்கி, அவன் குணமாகிவிடுவான் என்று சொன்னார், அவனும் குணமானான். அவருடைய வார்த்தை நிறைவேற வேண்டியதாய் இருந்தது; அவர் தேவனாய் இருந்தார். இப்போது, கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. இப்போது, என்னால் முடியாது... 51 இங்குள்ளவர்களில் எத்தனை பேர், தங்களுக்காக ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? கட்டிடம் முழுவதும், பால்கனி அல்லது எங்கிருந்தாலும், ஜெபிக்கப் பட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்ப வர்கள் உங்கள் கைகளை உயர்த்துவதைப் பார்ப்போம். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக. ஜெபிக்கப்பட வேண்டியவர்கள் சுமார் இரண்டாயிரம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இன்றிரவு நான், "சரி, நாம் இரண்டாயிரம் பேருக்காக ஜெபிக்கப்போகிறோம்" என்று சொன்னால். நான் வழக்கமாக பதினைந்து அல்லது இருபது பேரை அல்லது அதுபோலத்தான் ஜெபிப்பேன். இப்போது, இன்றிரவு அந்த பதினைந்து அல்லது இருபது பேர் யார்? நாம் எதற்காக ஜெப அட்டைகளைக் கொடுக்க வேண்டியிருக்கிறது என்று பார்க்கிறீர்களா? நாம் ஜெப அட்டைகளை வழங்கி, மக்களை வரிசைப்படுத்த மட்டுமே முடியும். ஆனால் இப்போது, கவனியுங்கள், நான் இயேசு கிறிஸ்துவைக் குறித்து உண்மையைச் சொல்லியிருந்தால், நான் உண்மையைத்தான் சொன்னேன் என்பதை அவர் இன்றிரவு உங்களுக்குச் சாட்சி பகருவார். 52 இப்போது, உங்களுக்கு என்னைத் தெரியும், நான் ஆரம்பப் பள்ளி கல்வியை மட்டுமே பெற்றுள்ளேன். எனக்கு உளவியலைப் பற்றி ஒன்றும் தெரியாது. மருத்துவத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. உடற்கூறியல் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே காரியம், நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை என் முழு இருதயத்தோடும் நேசிக்கிறேன். அது மட்டும்தான் எனக்குத் தெரியும். நான் படிக்காதவன், படிப்பறிவில் லாதவன், எனக்குச் சொந்தமாக எந்தத் திறமைகளும் இல்லை, ஒரு-ஒரு சாதாரண ஆளுமை கூட கிடையாது. அது உண்மைதான். ஆனால் எனக்கு ஒரு காரியம் தெரியும், அதற்காக நான் நன்றியுள்ளவனாயிருக்கிறேன்: இயேசு கிறிஸ்து என் மூலமாகச் செயல்படும்படி என்னை எப்படிக் கையளிப்பது என்பது எனக்குத் தெரியும். அதுதான்... உலகில் உள்ள உங்களின் அனைத்துக் கல்வியைக் காட்டிலும் நான் அதைத்தான் விரும்புவேன். தேவனுடைய ஆவியானவருக்கு என்னை எப்படிக் கீழ்ப்படுத்துவது என்பதை அறிந்துகொண்டு, "ஆண்டவரே, இதோ நான் இருக்கிறேன்" என்று சொல்லவே நான் விரும்புகிறேன். உலகில் உள்ள அல்லது உருவாக்கப் படக்கூடிய ஒவ்வொரு ஹைட்ரஜன் மற்றும் அணுகுண்டுகளின் ரகசியத்தை அறிந்திருப்பதைக் காட்டிலும், அந்த ரகசியத்தை என் இருதயத்தில் கொண்டிருக்கவே நான் விரும்புவேன். ஏனென்றால் அது நினைத்துப் பார்க்கக்கூடிய எல்லா அணுகுண்டுகளையும் விட மிகவும் சக்திவாய்ந்தது. எனவே அவருடைய நித்திய சிறகுகளின் கீழ், இன்றிரவு நான் என் அடைக்கலத்தைக் காண்கிறேன், மேலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நான் வியாதியுள் ளவர்களுக்கு ஊழியம் செய்கிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 53 இப்போது, முதல் பத்து அல்லது பதினைந்து ஜெப அட்டைகளை அழைப்போம். 1-ம் எண் ஜெப அட்டை யாரிடம் உள்ளது? எண் 1-லிருந்து தொடங்குவோம். ஜெப அட்டை எண் 1? அதில் என்ன எழுத்து இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது. அதில் ஒரு எழுத்தும் ஒரு எண்ணும் உள்ளது. ஜெப அட்டை எண் 1, நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் கையை உயர்த்துங்கள். ஜெப அட்டை எண் 1? இங்கே வாருங்கள், அம்மா. எண் 1. எண் 2, ஜெப அட்டை எண் 2 யாரிடம் உள்ளது? சரி. எண் 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, [ஒலி நாடாவில் காலியிடம்] 54 இப்போது நாம் ஒரு மனச்சித்திரத்தை வரைவோம். அதோ அந்த மலையிலிருந்து இறங்கி வரும் ஒரு நடுத்தர வயதுள்ள மனிதனை நான் காண்கிறேன், அவர் மலையிலிருந்து நடந்து வருகிறார், அவருடைய தாடி சற்று நரைக்கத் தொடங்கியிருக்கிறது, அவருடைய தலைமுடியின் பக்கவாட்டில் நரைத்திருக்கிறது, அவருடன் மூன்று பேர் நடந்து வருகிறார்கள், ஒரு முதியவர், இரண்டு இளைஞர்கள். அவர்கள் மேலே இருந்தார்கள்... என்ன நடந்தது என்பது-அவர்களுக்கு மட்டுமே தெரியும்: பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவான். அங்கே மேலே அவர் மறுரூபமாக்கப்பட்டார், அவர்களுக்கு முன்பாக அவர் மறுரூபமானார். "இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்" என்று தேவனின் சத்தம் சொல்வதை அவர் கேட்டார். அவர்களின் இருதயங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தன. கீழே எங்கோ ஒரு இடத்தில் அவர்கள் ஒரு சுகமளிக்கும் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அங்கே வலிப்பு நோயுள்ள ஒரு சிறுவன் இருந்தான், அவனுக்கு அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, அப்போது அந்தத் தகப்பன் இயேசு வருவதைக் கண்டான். அவன் சிறுவனின் கையைப் பிடித்துக்கொண்டு, அவரிடம் ஓடிச் சென்று, "ஆண்டவரே, என் மகன்மேல் இரக்கமாயிரும். பிசாசினால் அவன் மிகவும் வதைக்கப் படுகிறான்" என்றான். அவன் சொன்னான், "சில நேரங்களில் தண்ணீரில் விழுகிறான், சில நேரங்களில் நெருப்பில் விழுகிறான், பிசாசு அவனை அழிக்கப் பார்க்கிறது." அது வலிப்பு நோய். அவர் சொன்னார்... இயேசு சொன்னார், "நீ விசுவாசித்தால் என்னால் முடியும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்." தகப்பன் சொன்னான், "ஆண்டவரே, விசுவாசிக்கிறேன். என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்." அவர் நேற்றையதினத்தின் இயேசுவாக இருந்தார். அவரே இன்றைய தினத்தின் இயேசுவாக இருக்கிறார். 55 இப்போது, நாம் தாழ்மையாகவும் அமைதியாகவும், ஜெபத்தில் இருக்கும்போது... ஒருவேளை மூவாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்களுக்கு முன்பாக இங்கே நிற்பதன் நிலையை நீங்கள் கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நான்-நான் அறிவேன். மேலும் இங்கே, நிச்சயமாக, ஒவ்வொரு கூட்டத்திலும் நமக்கு விமர்சகர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரு மனிதனாக, இன்று இந்தக் கட்டிடத்தில் உள்ள ஒருவரைக்கூட எனக்கு-எனக்குத் தெரியாது. நான் பகலில் சபையாரைப் பார்த்தேன், சகோதரர் ரையான் என்ற பெயருடைய ஒரு முதியவரைக் கண்டேன். அவரை நாங்கள் ஜான் ரையான் என்று அழைப்போம், அவர் மிச்சிகனில் உள்ள டோவாஜியாக்கிலிருந்து வந்தவர். அவர் இங்கே அமர்ந்திருப்பதை நான்-நான் பார்த்தேன், மேலும் இல்லினாய்ஸ், சியோன் பகுதியைச் சேர்ந்த திரு. சிம்ஸ் என்ற பெயருடைய ஒரு மனிதர் இங்கே அமர்ந்திருப்பதையும் பார்த்தேன். இங்கேயே அமர்ந்திருக்கும் ஜெபர்சன்வில்லியைச் சேர்ந்த என் போதக நண்பர் சகோதரர் பீலரைத் தவிர, நான் அடையாளம் கண்டுகொண்ட இருவர் அவர்கள் மட்டுமே. சகோதரர் போஸைத் தவிர, எனக்கு-எனக்கு-எனக்குத் தெரிந்த நபர்கள் இங்கே அவர்கள் மட்டுமே. இன்றிரவு, சகோதரர் சிம்ஸையோ அல்லது சகோதரர் ரையானையோ கூட நான் பார்க்கவில்லை. இருந்தாலும், நான் பார்ப்பதும் எனக்குத் தெரிந்ததும், இங்கே அமர்ந்திருக்கும் சகோதரர் பீலரும் சகோதரர் மாடிசனும் மட்டுமே. 56 இப்போது, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார். அது சரிதானே? கர்த்தராகிய இயேசு உங்கள் ஒவ்வொருவரையும் அறிந்திருக்கிறார். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அவர் சரியாக அறிந்திருக்கிறார். உங்களைப் பற்றி எனக்குத் தெரியாத எல்லாவற்றையும் அவர் அறிந்திருக்கிறார். உங்கள் சகோதரனாகிய நான், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு ஊழியம் செய்ய முயற்சிக்கும்போது, என்னுடன் சேர்ந்து ஜெபித்து, எனக்கு உதவி செய்யும்படி தேவனிடம் கேட்பீர்களா? இப்போது, நான் அதைச் செய்து, ஜெபிக்கும்போது, தேவன் எனக்கு உதவி செய்தால், என்னால் உங்களுக்கு உதவி செய்ய முடியும். நானாகவே-நானாகவே உங்களுக்கு உதவி செய்ய முடியாது; உங்களுக்கு உதவி செய்ய என்னிடம் எந்த வழியும் இல்லை. நான் ஒரு மனிதன். ஆனால் தேவன் பேச விரும்பி, என் குரலைப் பயன்படுத்தினால், நல்லது, அப்போது அது உங்களுக்கு ஒரு உதவியாக இருக்கும். அது சரிதானே? அது உங்களுக்கு உதவும். வாழ்க்கையில் ஏதோ ஒரு கட்டத்தில் நடந்ததை, அது எனக்கு ஒரு ரகசியம் என்பதை அறிந்து, அவர் கிணற்றருகே இருந்த பெண்ணிடம் செய்ததைப்போலவோ, அல்லது வேறு எதையாவது பிலிப்புக்குச் செய்ததைப் போலவோ, உங்கள் வாழ்க்கையில் முன்பு நடந்ததை, அது உண்மை என்று உங்களுக்குத் தெரிந்த ஒன்றை அவர் உங்களிடம் சொன்னால். பின்பு, என்ன நடக்கப்போகிறது என்று வேறொன்றை அவர் சொன்னால், அது நிச்சயமாக உண்மையாகத்தான் இருக்க வேண்டும். அது சரிதானே. முன்பு நடந்ததை அவர் அறிந்திருந்தால், நிச்சயமாகவே இனி நடக்கப்போவதையும் அவர் அறிந்திருப்பார். 57 இப்போது, நீங்கள் சென்று அதை நம்பாமல் இருந்தால், நிச்சயமாக, நீங்கள் உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்வீர்கள். அவர், "நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே, செய்தாயானால் இதிலும் கேடானது உனக்குச் சம்பவிக்கும். நீ போ, இனி அவிசுவாசி யாயிராதே, இருந்தாயானால் இதிலும் கேடானது உனக்குச் சம்பவிக்கும்" என்று சொல்கிறார். உங்களுக்கு விருப்பமிருந்தால், அனைவரும் ஜெபத்தில் இருங்கள். 58 என்னால் பார்க்க முடியாத அந்த வெளிச்சம்-எங்கே... ஜெப வரிசை தயாராக உள்ளதா? சரி. சகோதரர்களே, நீங்கள் கீழே இருக்கிறீர்களா? எல்லாம் தயாரா, சகோதரர் அஷர்? ஓ, சரி. சரி, அவர்களை மேலே கூட்டி வாருங்கள். இப்போது, அனைவரும் பயபக்தியோடு இருங்கள், தேவனுடைய ஆவியானவருக்கு முன்பாக நம்மை நாமே தாழ்த்தும்போது, ஜெபித்துக்கொண்டிருங்கள். இப்போது, அந்த அம்மா முன்னோக்கி வருவார்கள். ஊழியம் செய்யப்பட வேண்டிய அந்த அம்மா, இங்கு வருவார்களானால். இப்போது, அந்த-அந்த அம்மா, நிச்சயமாக எனக்கு அறிமுகமில்லாதவர். எனக்கு-எனக்கு அவரைத் தெரியாது. அவருக்கு என்னைத் தெரிந்திருக்கலாம்; அதை என்னால் சொல்ல முடியாது. ஆனால் தேவனுக்கு அவரைத் தெரியும். 59 ஆனால் இப்போது, இந்தக் கட்டிடத்தில் இந்த மேடைக்கு அருகே எங்கோ ஒரு இடத்தில் (நியாயத்தீர்ப்பு நாளில் நான் இதற்குப் பதிலளிக்க வேண்டும்) கர்த்தருடைய தூதன் நிற்கிறார். நான் அவருடைய பிரசன்னத்தை உணருகிற அந்த ஜீவன் என் உடலை ஆட்கொள்ளும் வரை, இந்த அம்மாவைப் பற்றியோ அல்லது இங்குள்ள வேறு எவரைப் பற்றியோ எனக்கு ஒரு காரியம் கூட இன்னும் தெரியாது. ஆனால் அவர் என் வலதுபுறத்தில் நிற்பதிலிருந்து, இப்படி நகர்ந்து வந்து, என் ஆவியையும் என் ஜீவனையும் ஆட்கொண்டால், அப்போது நான் உங்கள் ஒவ்வொருவரையும் அறிந்துகொள்வேன், ஏனென்றால் அவர் தம்முடைய சித்தத்தின்படியே எனக்கு வெளிப்படுத்துவார். அங்கே உங்களிடம் எத்தனை பேரிடம் ஜெப அட்டைகள் இல்லை, ஆனால் உங்களுக்காக ஜெபிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளை உயர்த்து வதைப் பார்ப்போம். நான் சொன்ன காரியங்கள் சத்தியம் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப் பதற்காகவும், உங்கள் சகோதரனை அவருடைய ஊழியக்காரனாக ஏற்றுக்கொள்வதற்காகவும், நீங்கள் இந்தப் பக்கமாகப் பார்க்கும்படி இப்போது நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன், சபையாராகிய உங்களை அவர் அங்கேயே அழைத்து, அங்கேயே உங்களைக் குணமாக்குகிறாரா என்று பார்ப்போம். 60 குருடனைப் போல உங்கள் விசுவாசம் இருக்கட்டும், அவருடைய வஸ்திரத்தைத் தொட்டு, சாந்தமாக அங்கே பின்னால் நின்ற அந்தப் பெண்ணைப் போல உங்கள் விசுவாசம் இருக்கட்டும்... அவளுக்கு ஒரு ஆறுதல் இருந்தது; அவள் கூட்டத்தில் இருந்தாள். அவளுடைய விசுவாசம் ஏதோ ஒரு வகையில் அவரைத் தொட்டது என்று அவளுக்கு-அவளுக்குத் தெரியும். அவர் திரும்பி, சபையாரைப் பார்த்து, "உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "உன் இரத்தப்போக்கு நின்றுவிட்டது," மேலும் அவள் குணமானாள். அவரே இன்றையதினத்தின் இயேசு. அவரே இன்றைக்கு இருக்கிறார். இப்போது, நாம் அனைவரும் இணைந்து "விசுவாசித்தால்" என்ற இந்தப் பாடலை, வாத்தியக்காரர்கள் நமக்கு இசை வழங்கினால், ஒரே ஒரு முறை மெதுவாகப் பாடுவோம். சரி. ஓ, இப்போது மிகவும் மெதுவாக. விசுவாசித்தால் மட்டும் போதும், விசுவாசித்தால் மட்டும் போதும், எல்லாம் கூடும், விசுவாசித்தால் மட்டும் போதும்; விசுவாசித்தால் மட்டும் போதும், விசுவாசித்தால் மட்டும் போதும், எல்லாம் கூடும்... அவர் இப்போது இங்கே இருக்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், தேவனுடைய மகிமைக்காகவும், அவருடைய குமாரனின் உயிர்த்தெழுதலின் வெளிப்பாட் டிற்காகவும் நான் ஒவ்வொரு ஆவியையும் என் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறேன். பரிசுத்த ஆவியானவர் இங்கே இருக்கிறார். உங்களை அறிந்திருக்கிற அவரை, பயபக்தியுடன் அறிந்துகொள்ளுங்கள். மேலும் ஜெபியுங்கள். 61 இப்போது, சகோதரியே, நீங்கள் என்னிடம் சற்று நெருங்கி வர வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உங்களிடம் பேச வேண்டும். நீங்கள் எனக்குப் பதிலளிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்களுக்குத் தெரிந்தவரையில், உங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து சொல்லப்போனால், நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் முற்றிலும் அறிமுகமில்லாதவர்கள் என்று நினைக்கிறேன். என் வாழ்நாளில் நான் உங்களைப் பார்த்ததே இல்லை. நீங்கள் இங்கு மேடைக்கு வந்திருக்கும் ஒரு நபர் மட்டுமே. உங்களிடம் ஒரு-ஒரு எண்ணும் எழுத்தும் உள்ள ஒரு சிறிய அட்டை இருந்தது. மேலும் நீங்கள் வெறுமனே... அந்த எண் அழைக்கப்பட்டது. அவ்வளவுதான் நடந்தது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, ஒருவேளை அவர் இங்கே இருந்தால் என்ன ஆகும்? அவர்-அவர்-அவரால் உங்களைக் குணமாக்க முடியாது, ஏனென்றால் அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார். அவர் கல்வாரியில் மரித்தபோது, உங்கள் சுகத்தை அவர் விலைக்கு வாங்கிவிட்டார். உங்கள் விசுவாசம் தான் அதைச் செய்ய வேண்டும். ஆனால் அவர் இங்கே நின்றிருந்தால், அது அவர் கிணற்றருகே இருந்த ஸ்திரீயிடம் பேசியது போல இருக்கும். உங்களைப்பற்றி அவருக்கு ஏதேனும் தெரிந்திருக்கும். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், அது அவருக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் ஒரு விசுவாசியற்றவராக இருந்தால், அது அவருக்குத் தெரிந்திருக்கும். உங்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடாத ஏதாவது ஒன்று இருந்தால், அதைப்பற்றி அவர் உங்களிடம் சொல்வார். அதை நீங்கள் நம்பவில்லையா? 62 சரி, அவர் மரித்தோரிலிருந்து எழுந்து, ஆவியின் ரூபத்தில் இங்கே வாழ்ந்தால், அவர் அதைத் தம்முடைய ஊழியக்காரன் மூலமாகப் பேச முடியும். அது சரிதானே? உங்களைப் பற்றிய ஏதேனும் ஒன்றை, ஒருவேளை, உங்களுக்கு என்ன பிரச்சனை, அல்லது எனக்கு எதுவும் தெரியாது என்று நீங்கள் அறிந்திருக்கிற உங்கள் வாழ்க்கையில் உள்ள ஏதோ ஒன்றை அவர் எனக்குத் தெரியப்படுத்தினால், நான் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறேன் என்று விசுவாசித்து, ஒருவேளை நீங்கள் விரும்புவது சுகமாக இருந்தால், உங்கள் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அது எதுவாக இருந்தாலும், நீங்கள்-நீங்கள் எதற்காக இங்கே வந்திருக்கிறீர்களோ அதை ஏற்றுக்கொள்வீர்கள். அது சரிதானே? சரி, அவர் அதை அருளுவாராக. ஏதோ நடக்கிறது என்பதை நீங்கள் உணர்கிறீர்கள், அல்லவா? உங்கள் சகோதரரைத் தவிர வேறு ஏதோ ஒன்றின் பிரசன்னத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை நீங்கள்-நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அது சரியாக இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள். 63 இப்போது, பார்வையாளர்கள்... பரிசுத்த ஆவியானவர்... நாளை இரவு, இந்த-இந்தத் தூதனுடைய படங்கள் இங்கே இருக்கும். அது இப்போது இங்கேயே நிற்கிறது, இப்போது இங்கேயே நிற்கிறது. தன்னிடம் வரும் அவருடைய அந்தப் பிரசன்னத்தை அவள் உணருகிறாள். அவள் ஒரு கிறிஸ்தவள், ஒரு விசுவாசி, ஆவியால் நிரப்பப்பட்ட ஒரு கிறிஸ்தவள், மேலும் அவள் விசுவாசிக்கிறாள். அதனால் தான் அவளுக்கு அருகில் நிற்கும் அந்தப் பிரசன்னத்தின் செயல்பாட்டை அவள் உணருகிறாள். அது சரிதானே, அம்மா? நீங்கள்-நீங்கள் ஒரு விசுவாசியா? அது சரிதான். ஏனென்றால் உங்கள் ஆவி வரவேற்கிறது. இப்போது நம் இருவர் மீதும் இருக்கும் கர்த்தருடைய தூதன், உங்கள் ஆவி வரவேற்கிறது என்பதை என்னைக் காணச் செய்கிறார். 64 நீங்கள் ஒரு துன்பத்தில் இங்கே இருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏதோ ஒன்று-ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மயக்கமடைவது போல, அல்லது கீழே விழுவது போல, பெலவீனமடைவது போல, மயக்க நிலை உங்களைத் தாக்குவதை நான் காண்கிறேன், அது உங்களை ஆட்கொள்கிறது, சில சமயங்களில் அவர்கள் உங்களுக்கு விசிறி விட வேண்டி வருகிறது அல்லது வேறு ஏதோ செய்ய வேண்டி வருகிறது. உங்களுக்கு, இது ஒரு தாக்குதல் போன்றது, ஒரு-ஒரு மயக்க நிலை; அது ஒரு நரம்பு தளர்ச்சி நிலையினால், நரம்பு தொடர்பான இருதயத்தினால் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் அன்புக்குரிய ஒருவர் மீது அக்கறையுடன் இருக்கிறீர்கள். அது சுமார் ஒன்பது அல்லது பத்து வயதுள்ள ஒரு சிறுவன். மேலும் அவன் ஏதோ ஒருவித இருதய நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறான். அது உண்மைதானே? இப்போது, நீங்கள் உங்கள் கையில் இங்கு கொண்டு வந்த கைக்குட்டையை என்னிடம் கொடுங்கள். இப்போது, நீங்கள் அருகில் வர வேண்டும் என்று விரும்புகிறேன். எங்கள் அன்பான பரலோகப் பிதாவே, ஒவ்வொரு இருதயத்தின் இரகசியத்தையும் அறிந்தவரே, வெளிப்படுத்தப்படுவதைத் தவிர எதுவும் மறைக்கப்பட்டதில்லை, மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த் தெழுதலின் மகிமைக்காக, அவளுடைய சரீரத்தில் இருக்கும் இந்த வியாதியை நான் இப்போது சபிக்கிறேன். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே, அது அவளை விட்டு வெளியேறி, அவளை விட்டு நீங்குவதாக. மேலும் இந்த கைக்குட்டையை நான் அவளுடைய மகனுக்கு அனுப்புகிறபடியால், அவனுடைய இருதய நோய் நீங்கி, தேவனின் மகிமைக்காக அவளும் குணமடையவும், அந்த மகனும் குணமடையவும் கடவது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே. ஆமென். நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்களிடம் சொல்லப்பட்டது சரியானது என்பதை நீங்கள் அறிவீர்கள். சொல்லப்பட்டது, சரியாக இருக்கும். செல்லுங்கள், சந்தேகப்பட வேண்டாம்; நீங்கள் அந்த மயக்க நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள், உங்கள் மகன் குணமடைவான். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 65 இப்போது, தேவன் மேல் விசுவாசம் வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்; நீங்கள் மகிமையைக் காண்பீர்கள்... இங்குள்ள ஒவ்வொரு நபரும், இந்த நேரத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது, பயபக்தியுடன் இருங்கள். அங்குமிங்கும் நகர வேண்டாம். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் நகரும்போது, ஒரு நபரிடமிருந்து வெளியேறும் தீய ஆவிகள் மற்றொரு நபருக்குச் செல்கின்றன. இது வேதாகமம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? அது அப்படித்தான். அவை நிச்சயம் உங்களிடமே நேரடியாக வரும், அது உறுதி. ஒரு இருதய நோயையோ, அல்லது ஒரு புற்றுநோயையோ, அல்லது ஏதோ ஒன்றையோ நீங்கள் வெளிப்படுத்த வேண்டாம், பயபக்தியுடன் இருங்கள், ஏனென்றால் நீங்கள் கீழ்ப்படிந்தால் ஒழிய என்னால் அதைத் தடுக்க முடியாது. நினைவில் கொள்ளுங்கள், வேதாகமத்தில், ஒரு மனுஷனிடமிருந்து ஒரு ஆவி துரத்தப்பட்டபோது, அவை, "நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி எங்களுக்கு உத்தரவு கொடும்" என்று சொன்னன. அவை தங்குவதற்கு ஒரு-ஒரு இடம் கிடைக்கும் வரைக்கும் அவற்றுக்கு வல்லமை இல்லை. சில சிறுவர்கள் வெளியே சென்று, தாங்களும் தீய ஆவிகளைத் துரத்த முடியும் என்று நினைத்து, பிசாசைக் கூப்பிட்டார்கள், அப்போது பிசாசு அந்த மனுஷனை விட்டு அந்த சிறுவர்களுக்குள் புகுந்தது. எனவே பயபக்தியாக இருங்கள். 66 இப்போது, சகோதரியே, நீங்களும் நானும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லா தவர்கள் என்று நினைக்கிறேன். எனக்கு உங்களைத் தெரியாது, என் வாழ்நாளில் உங்களைப் பார்த்ததே இல்லை. ஆனால் நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்கிறீர்கள். உங்கள் சகோதரரின் முன்னிலையில் இருப்பது மட்டுமே நீங்கள் இப்போது உணரும் விதத்தில் உங்களை உணர வைக்க முடியாது. ஏனென்றால், உங்களுக்கும் எனக்கும் இடையில் ஒரு மூடுபனி போன்ற, பனி மூட்டமான, வெண்மையான தோற்றம் கொண்ட ஒரு நிலை இருக்கிறது, அதனால் நீங்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்கிறீர்கள் என்பதை நான் அறிகிறேன். ஏனென்றால் நீங்கள் ஏதோ ஒன்றைக் கேட்டு வந்திருக்கிறீர்கள், மேலும் வேதவாக்கியம், "கேளுங்கள், அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்" என்று சொல்கிறது. உங்கள் பிரச்சனைகள் என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், நீங்கள் கேட்பதை ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்றுக்கொள் வீர்களா? ஓ, அவர் அதை அருளுவாராக. 67 அங்கே அமர்ந்திருக்கும் ஐயா, அந்த நரம்பு தளர்ச்சி நிலையிலிருந்து தேவன் உங்களைக் குணமாக்குவார் என்று விசுவாசிக் கிறீர்களா? அவர் உங்களைச் சுகமாக்குவார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் அதைச் செய்வார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். வெள்ளை சட்டை அணிந்திருக்கும் நீங்கள், நரம்பு தளர்ச்சி நிலையால் அவதிப்படுகிறீர்கள். அது சரிதானே, ஐயா? அங்கே மூக்குக்கண்ணாடி அணிந்து அமர்ந்திருக்கிறீர்கள், இங்கே உங்கள் கையில் ஒரு கடிகாரம் கட்டியிருக்கிறீர்கள். உங்கள் கையை உயர்த்துங்கள், அதனால் நான்... அது நீங்கள்தான். உங்களுக்கு நரம்பு தளர்ச்சி நிலை இருக்கிறது, அது சரிதானே? நீங்கள் ஓர் அறிமுகமில்லாதவர். எனக்குத் தெரியும் நீங்கள்-நீங்கள் இங்கே வந்து அமர்ந்தீர்கள், அவ்வளவுதான். அது உண்மையா? ஆனால் நீங்கள் நரம்பு தளர்ச்சி நிலையால் அவதிப்படுகிறீர்கள், சற்று முன்பு அங்கே இருந்தபடியே, நான் தேவனுடைய ஊழியக்காரன் என்று உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்க முயற்சித்தீர்கள். அது சரிதானே? மேலும் யாரோ வருவதை நான் காண்கிறேன்... பிறகு அங்கே உங்களுடன், உங்களுக்கு அருகிலேயே அமர்ந்திருக்கும் மற்ற இரண்டு பேர். ஆம், ஐயா, அது சரிதான். நீங்கள் அவதிப்படுகிறீர்கள்-ஒருவர் அவதி... அங்கே அமர்ந்திருக்கும் உங்கள் இருவருக்கும் வயிற்றுக் கோளாறு இருக்கிறது. தேவன் உங்களைச் சுகமாக்குவார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் அனைவரும்-உங்கள் இருவரும் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? உங்கள் கையை உயர்த்துங்கள். நீங்கள் மூன்று பேரும், சற்று நேரம் எழுந்து நில்லுங்கள். சர்வவல்லமையுள்ள தேவனே, மேடையில் இருக்கும் இந்தப் பெண்ணிடமிருந்து அவர்களுடைய விசுவாசத்தின் பக்கம் உமது கவனத்தைத் திருப்பும்படி, அவர்களுடைய விசுவாசம் உம்மைத் தொட்டுவிட்டது. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுடைய சரீரங்களின் வியாதிகள் நீங்குவதாக, நான் அதைத் துரத்துகிறேன். இன்றிரவு அவர்கள் விடுதலையாகிச் செல்வார்களாக. ஆமென். கர்த்தர் உங்கள் மூன்று பேரையும் ஆசீர்வதிப்பாராக, நீங்கள் சுகமடைந்து வீட்டிற்குச் செல்கிறீர்கள். உங்கள் விசுவாசம் உங்களை இரட்சித்தது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். 68 என்னை மன்னியுங்கள், அம்மா. பரிசுத்த ஆவியானவர் அசையும்போது ஏதோ ஒன்று உங்களை விட்டு விலகி அந்தப் பக்கம் சென்றது, ஆனால் நீங்கள் ஒரு-மற்றொரு நபருக்காக இங்கே நிற்கிறீர்கள். மேலும் அந்த நபர் சமீபத்தில்தான் ஏதோ ஒரு மருத்துவரிடம் சென்றிருந்தார், அவர்கள் கொஞ்சம் ரத்தம் எடுத்தார்கள், அல்லது... அது ஒரு ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது வேறொரு நபர். சமீபத்தில் இந்த நபரிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி வந்தது, நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் அந்த உறையில் உள்ள தபால் முத்திரை நியூயார்க்கிலிருந்து வந்ததைக் காட்டுகிறது. அது நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு பெண், ரத்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் அவதிப் படுகிறாள், அவளுக்காகத்தான் நீங்கள் நிற்கிறீர்கள். அது சரிதானே? சரி, நீங்கள் அவள் மீது வைக்க விரும்பும் உங்கள் கைக்குட்டையை என்னிடம் கொடுங்கள். பரலோகப் பிதாவே, இந்தக் கைக்குட்டை அந்தப் பெண்ணைச் சென்றடையும்போது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் இதை அனுப்புகிறபடியால், அவள் முற்றிலுமாகச் சுகமடைவாளாக. ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் கேட்டதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 69 கர்த்தராகிய இயேசுவின் நாமம் ஸ்தோத்தரிக்கப்படுவதாக. தம்முடைய குமார னாகிய இயேசுவை எழுப்பிய பரலோகத்தின் தேவன், இந்த கடைசி நாட்களில் அவர் இருக்கிறார் என்பதற்கான சாட்சி இல்லாமல் நம்மை விட்டுவிடவில்லை. கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் தொடருவதாக. சரி, அந்த... என்னை மன்னியுங்கள். நான் வருத்தப்படவில்லை, ஒரு தரிசனம் உங்களுக்கு என்ன செய்யும் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? தானியேல் என்ற பெயர் கொண்ட ஒரு-ஒரு மனுஷன் ஒரு தரிசனத்தைக் கண்டான், அவனுடைய தலைக்குள் பல நாட்கள் அவன் கலக்கமடைந்திருந்தான். 70 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? உங்கள் குழந்தை... நான் கர்த்தராகிய இயேசுவின் ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நிற்கிறீர்கள் என்று-என்னுடைய பிரசன்னத்தில் அல்ல, இப்போது அவருடைய பிரசன்னத்தில் நிற்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா? உங்கள் நன்மைக்காக, உங்களிடம் பேசுவதற்காக, தம்முடைய குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக இப்போது என்னை அபிஷேகம் செய்துள்ள சர்வவல்லமையுள்ள தேவன்... இந்தக் குழந்தைக்கு என்ன பிரச்சனை என்றும், இந்தக் குழந்தை யார் என்றும் தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், இந்தக் குழந்தையால் அதைச் செய்ய முடியாத அளவுக்கு இது மிகவும் சிறியதாக இருப்பதால், குழந்தையின் சுகத்தை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா என்று விசுவாசிக்கிறீர்களா? இந்தச் சிறுவன் ஒருவித இருமல் நோயால் அவதிப்படுகிறான். அது ஆஸ்துமா சம்பந்தப் பட்ட, ஒரு வறட்டு இருமல். அது சரிதானே? அவன் உங்கள் மகன். உங்கள் சொந்த வீட்டிலேயே நான் அவனைக் காண்கிறேன். மேலும் சொல்கிறேன், நீங்களே ஒரு ஊழியக்காரர். நீங்களும் அவதிப்படுகிறீர்கள். உங்களுக்குச் சமீபத்தில்தான் ஒரு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டது, ஒரு பெரிய நதி பாயும் இடத்திற்கு அருகே, ஒரு நதிக்கு அருகில் எங்கோ நீங்கள் வசிக்கிறீர்கள். அது வுட்வில்லி (Woodville) பகுதியிலோ அல்லது அது போன்ற ஏதோ ஒரு பகுதியிலோ உள்ள மிசிசிப்பி நதி என்று நான் நம்புகிறேன். அது சரிதானா, நதிக்குக் கீழே சற்று அருகில்? சரி, உங்கள் இருவரையும், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் வீட்டிற்கு அனுப்புகிறேன். நரம்பு தளர்ச்சியின் காரணமாக, நீங்கள் கொஞ்ச காலம் பிரசங்க மேடையை விட்டு விலகியிருந்தீர்கள் அல்லவா? வீட்டிற்குச் செல்லுங்கள், நீங்கள் சுகமாகத் திரும்புகிறீர்கள். கர்த்தராகிய இயேசுவின் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். 71 தேவன் மேல் விசுவாசம் வையுங்கள், உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்துவதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள், மேலும் உங்கள் ஒவ்வொருவரும் சுகமாக்கப்படுவீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். தேவன் சொல்லியிருப்பதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். இப்போது, இப்போது விசுவாசியுங்கள்... சரி. நோயாளி வரட்டும். சரி. நீங்கள் வரும்போது, அம்மா, விசுவாசத்துடன் வாருங்கள். உங்கள் இருதயத்தில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நீங்கள் சற்று சந்தேகித்தாலும், பரிசுத்த ஆவியானவரால் முடியாது, அவர் செய்யமாட்டார்... அவர் மிகவும் மென்மை யானவர். மேலும் நான்-நான் ஜெபிப்பதற்கு முன் உங்களுடன் சற்று நேரம் பேச விரும்புகிறேன். முதலாவது, பிரச்சனை என்ன, உங்களின் நிலை என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். தேவன் உங்களை அறிந்திருக்கிறார் என்றும், நீங்கள் பிறந்ததிலிருந்தே அவர் உங்களை அறிந்திருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை, அவரிடமிருந்து நீங்கள் விரும்புவது என்ன என்பதை அவர் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா? அல்லது நீங்கள் ஒரு விமர்சகராக இங்கு வந்திருந்தால், அது எனக்குத் தெரிந்துவிடும், மேலும் நீங்கள்-என்ன நடக்கும் என்பதை நீங்கள் காண்பீர்கள். 72 ஆனால் நீங்கள் ஒரு விமர்சகர் அல்ல என்பதை நான் அறிவேன், ஏனென்றால் நீங்கள் உண்மையாக வந்திருக்கிறீர்கள். மேலும் நீங்கள்-நீங்கள் வேறொரு நகரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள்; நீங்கள் இந்த நகரத்தைச் சேர்ந்தவர்களே அல்ல. மேலும் நீங்கள் பல வருடங்களாக அவதிப்படுகிறீர்கள்; சுமார் ஆறு அல்லது ஏழு வருடங்களாக நீங்கள் அவதிப்படுகிறீர்கள், உங்களுக்கு அறுவை சிகிச்சையும் நடந்திருக்கிறது. நீங்கள் மருத்துவமனையில் இருந்திருக்கிறீர்கள். நீங்கள் இரண்டு முறை மருத்துவமனையில் இருந்தி ருக்கிறீர்கள், நீண்ட காலம் மருத்துவமனையில் இருந்திருக்கிறீர்கள், அவர்கள் உங்கள் தண்டு வடம் சம்பந்தமாக ஏதோ செய்து கொண்டி ருக்கிறார்கள். அது ஒரு தண்டுவடம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. அது உண்மைதானே? இப்போது உங்களைச் சுகமாக்குவதற்காக அவர் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் அவரிடம் கேட்டால், வேதனைகள் நீங்கி, நீங்கள் சுகமாக வீட்டிற்குச் செல்வீர்களா? அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? நான் ஒரு ஆணுருவத்தைக் காண்கிறேன்; அது உங்கள் கணவர். அவர் பெயர் ஹாரி அல்லது அது போன்ற ஏதோ ஒன்று. அது சரிதானே? அது சரிதான். எனக்குத் தெரியும்; அவர் அங்கேயே அமர்ந்திருக்கிறார், நான் உங்களிடம் பேசும்போது அவருடைய ஆவி ஈர்ப்பதை என்னால் உணர முடிகிறது. அவர் இப்போது விசுவாசிக்கிறார். இங்கே வாருங்கள், அப்படியே இந்த வழியில். 73 அன்பான பரலோகப் பிதாவே, இந்தப் பெண் ஜீவனைப் பெறவும், இந்த வேதனையிலிருந்து விடுபடவும் விரும்பி, இன்றிரவு இந்தப் பார்வையாளர்களுக்கு முன்பாக நிற்கும்போது, நான் அவளுக்காக என் முழு இருதயத்தோடும் ஜெபிக்கிறேன், ஆண்டவரே. மேலும் உம்முடைய ஊழியக்காரர் களாகிய மருத்துவர்கள், அவளை இதிலிருந்து விடுவிக்க முயற்சித்தார்கள், ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். ஆனால் நீர் தவறமாட்டீர். நீர் தேவன், நீர் தவற முடியாது. இந்த வாக்குத்தத்தத்தை எங்களுக்கு அளித்தவர் நீரே. "விசுவாசிக் கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்" என்று சொல்லப்பட்ட நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் வார்த்தைகளை நான் நிறைவேற்றும்போது, அதன்படியே செய்யும்படி நான் உம்மிடம் கேட்கிறேன். இப்போது, சாத்தானே, இந்தப் பெண்ணைக் கட்டியிருக்கும் உனக்குச் சொல்கிறேன். நீ மருத்துவரிடம் மறைந்து கொண்டாய், ஆனால் தேவனிடமிருந்து உன்னால் மறைக்க முடியாது. இந்தப் பெண்ணை விட்டு வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, இந்தப் பெண்ணை விட்டு விலகி, அவளிடமிருந்து வெளியே வரும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். ஆமென். இப்போது, சகோதரியே, உங்கள் கணவரிடம் செல்லுங்கள், அந்த-நீங்கள் இப்போது அவதிப்படவில்லை; அந்த வலி... அது சரிதானே? வலிகள் போய்விட்டன, நீங்கள் தேவனை மகிமைப்படுத்தும்படி சுகமடைந்த ஒரு பெண்ணாக உங்கள் கணவரிடம் செல்கிறீர்கள். கர்த்தராகிய இயேசுவுக்கு நன்றி. பயபக்தியாக இருங்கள், ஜெப சிந்தையுடன் இருங்கள். 74 சரி, நோயாளியுடன் வாருங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்களும் நானும் கூட ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என்று நினைக்கிறேன்? நமக்கு ஒருவரைப்பற்றி ஒருவருக்குத் தெரியாது, ஆனால் இயேசு கிறிஸ்து நம் இருவரையும் அறிவார், அல்லவா? சரி இப்போது, அம்மா, எனக்குத் தெரிந்த வரையில், இந்த வேதாகமத்தின்படி நான் உண்மையைச் சொல்லியிருக்கிறேன். இப்போது, நான் உண்மையைச் சொல்லி யிருந்தால், தேவன் தம்முடைய வரத்தைக் குறித்துச் சாட்சி கொடுப்பார் என்று வேதாகமம் சொல்கிறது. அது உண்மைதானே? எபிரெயர் புஸ்தகத்தில் அது சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் உங்கள் வியாதி என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்த முடியும். தேவனுக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியும். எனக்குத் தெரியாது. நீங்கள் எனக்கு முன்பாக நிற்கும் ஒரு பெண் மட்டுமே. ஆனால் தேவன் உங்களை அறிவார். அவர் உங்கள் பிரச்சனையை வெளிப் படுத்தினால், நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப் பீர்களா? நான்-எப்படியோ, உங்களுக்கு முன்பாக ஒரு இளம் பெண் நிற்பதை நான் காண்கிறேன். இது ஒரு-இது ஒரு விசித்திரமான... பார்வையாளர்களே, சற்று நேரம் பய பக்தியுடன் இருங்கள். இப்போது, நீங்கள் என்னை நோக்கிப் பாருங்கள். நான்-நான் அதை எதை வைத்து சொல்கிறேன் என்றால், பேதுருவும் யோவானும் வாசலைக் கடந்து சென்றபோது, "எங்களை-எங்களை நோக்கிப் பார்" என்று சொன்னது போலவே சொல்கிறேன். அதாவது, கவனத்தை ஈர்ப்பதற்காக. மேலும் நான் அங்கே அந்தப் பெண்ணின் மனதையும் படிக்கவில்லை. புரிகிறதா? 75 இல்லை. இது... அது சரியாய் கீழே அமர்ந்திருக்கும் அந்த கறுப்பினப் பெண். அவளுக்கு ஒரு தசை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது. அது சரிதானே, இளம் பெண்ணே? உங்கள் காலூன்றி எழுந்து நில்லுங்கள். அந்த இளம் பெண்ணை உங்களுக்குத் தெரியாது, அல்லவா? உங்கள் வாழ்நாளில் அவளைப் பார்த்ததே இல்லை. உங்களுக்கு இந்த அம்மாளைத் தெரியாது, அல்லவா? பார்த்ததே இல்லை. ஒருவரைப்பற்றி ஒருவருக்கு எதுவும் தெரியாது. நீங்கள் அவளைப் பற்றி நினைக்கவே இல்லை. எனவே நீங்கள் நினைப்பது தவறு. நான் உங்கள் மனதைப் படிக்கவில்லை. தேவன் அதை வெளிப்படுத்த விரும்பினார். புரிகிறதா? உங்களுக்கு தசை சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது, இல்லையா அம்மா. நீங்கள் ஒரு கிறிஸ்தவர் இல்லை, அல்லவா? ஆனால் ஒருவேளை-நீங்கள் இப்போது இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்கள் கையை உயர்த்தி, "நான் கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் உங்களைச் சுகமாக்கு கிறேன்; அந்த தசை சம்பந்தப்பட்ட பிரச்சனை உங்களை விட்டு நீங்கிவிட்டது. போ, இனிப் பாவஞ் செய்யாதே. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென். இப்போது, கர்த்தர் தம்முடைய ஆசீர்வாதங்களை வழங்குவாராக. 76 இப்போது, நீங்கள் இங்கே ஒரு சீமாட்டிக்காக வந்திருக்கிறீர்கள். நீங்கள் உங்களுக்காக வரவில்லை. அது ஒரு சீமாட்டி. அவர் உங்கள் உறவினர். அவர் ஒரு மருமகள் (சகோதரியின் அல்லது சகோதரனின் மகள்). அவர் இங்கே சிகாகோவில் இருக்கிறார், அவருக்கு ஏதோ இரத்த சம்பந்தமான வியாதி அல்லது அதுபோன்ற ஒன்று உள்ளது. அது அவரைத் தொந்தரவு செய்யும் ஒரு இரத்த வியாதி. நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிற வேறு ஒரு சீமாட்டியையும் நான் பார்க்கிறேன், அது மற்றொரு மருமகள். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடக்கும் அநேக பாலங்கள் உள்ள ஒரு நதிக்கு அருகே அவர் இருக்கிறார், அவர் ஒரு மருத்துவ மனையில் இருக்கிறார். அவர் பிள்ளைகள் உள்ள ஒரு பெண்மணி. அவருக்கு கணவர் இல்லை, அந்தப் பெண்மணிக்கு நீரிழிவு நோய் உள்ளது, அவர் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார். அவர் ஒரு மருத்துவமனையில் இருக்கிறார், அந்த மருத்துவமனை செயின்ட் லூயிஸில் உள்ளது. அது சரிதானே? தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், வியாதியஸ்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக, ஒரு பிரதிநிதியாக இந்தப் பெண்மணியின் மீது நான் என் கைகளை வைக்கிறேன், அவர்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக குணமாக்கப்படு வார்களாக. ஆமென். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆவதைக் காணச் செல்லுங்கள். 77 மரித்துக்கொண்டிருக்கிற விபச்சாரமான, பக்தியற்ற இந்த உலகத்திற்கு, தேவனுடைய மகிமை அறியப்படும் இந்த கடைசி மற்றும் பொல்லாத நாட்களில், தேவனுடைய குமாரனின் உயிர்த்தெழுதலின் வல்லமையைக் காண்பிக்கும்படி, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பின பரலோகத்தின் தேவன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. இயேசுவே ஜீவனுள்ள தேவனுடைய குமாரன் என்பதை எல்லா மனுஷரும் அறிந்துகொள்வார்கள். சரி, வாருங்கள், ஐயா. பயபக்தியாக இருங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், தேவன் ஒரு அற்புதமான வழியில் தம்மை உங்களுக்கு வெளிப் படுத்துவார். நான் உங்களிடம் ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நாம் ஒருவருக்கொருவர் முன்பின் தெரியாதவர்கள் என்று நான் நினைக்கிறேன், அப்படித்தானே? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் தேவனையும், கிறிஸ்துவை அவருடைய குமாரனாகவும், என்னை அவருடைய ஊழியக்காரனாகவும் விசுவாசிக் கிறீர்கள். அப்படியானால் சென்று உங்கள் இரவு உணவைச் சாப்பிடுங்கள். உங்கள் வயிற்றுப் பிரச்சனை உங்களை விட்டு நீங்கிவிட்டது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் குணமாக்கப்பட்டுவிட்டீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 78 நீங்கள் வருவீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீர்களா? இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய ஊழியக்காரன் என்று விசுவாசிக்கிறீர்களா? தேவன்- உங்கள் நிலைமை என்னவென்பதை அவர் எனக்குக் காட்ட முடியுமா என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நிச்சயமாக, நீங்கள் கண்ணாடிகள் அணிந்திருக்கிறீர்கள், ஆனால் என்னால் பார்க்க முடியாத ஏதாவது ஒரு ரகசியம் இருந்து, அவர் அதை வெளிப்படுத்தினால், உங்கள் சுகத்திற்காக இயேசு ஏற்கனவே மரித்துவிட்டார் என்று இன்றிரவு நான் உங்களுக்குச் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? அப்படியானால் உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்வீர்களா? உங்கள் கண்களைத் தவிர்த்து, எனக்கு ஒன்றும் தெரியாத, உங்கள் வாழ்க்கையின் சில ரகசியங்களை தேவன் எனக்கு வெளிப் படுத்தினால், நீங்கள் விசுவாசிப்பீர்களா? உங்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது. அது சரிதானே? உங்கள் சுகத்தை ஏற்றுக் கொண்டீர்களா? அப்படியானால் நீங்கள் அதைப் பெறுவீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப் பாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், சென்று நீங்கள் விசுவாசித்தபடியே இருங்கள். 79 "கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக" என்று சொல்வோம். [சபையார், "கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படுவாராக" என்று சொல் கிறார்கௗ்.] எப்படி இருக்கிறீர்கள், இளம் சீமாட்டியே? உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக் கிறீர்களா? நீங்கள் மீண்டும் சாப்பிட விரும்புகிறீர்கள், மேலும் நன்றாகவும் இருக்க விரும்புகிறீர்கள், இல்லையா? ஒரு நரம்புத் தளர்ச்சி நிலைதான் இதை ஏற்படுத்தியிருக்கிறது. உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் ஏறக்குறைய நரம்புத் தளர்ச்சியோடு, மனச் சோர்வடைந்து, எப்போதும் பாலங்களைக் கடந்து, காரியங்களைக் குறித்து கவலைப் பட்டுக்கொண்டே இருந்திருக்கிறீர்கள். அது சரிதானே? அந்த நரம்புத் தளர்ச்சி வகை உங்கள் வயிற்றில் ஒரு அல்சரை (புண்ணை) ஏற்படுத்தியிருக்கிறது. நீங்கள் சாப்பிடும்போது, அது உங்கள் வயிற்றில் புளித்துப்போய் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. உங்களுக்கு உண்மையான ஒரு நரம்புத் தளர்ச்சி நிலை உள்ளது. மதிய நேரத்தின் பிற்பகுதியில் அது உங்களை சோர்வடையச் செய்கிறது. அது சரிதானே? சில நேரங்களில் நீங்கள் மிகவும் பதற்ற மடைகிறீர்கள், உங்களால் உங்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அது சரிதானே? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் குணமாக்கப் பட்டுவிட்டீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னால், அதை ஏற்றுக் கொள்வீர்களா? ஏற்றுக்கொள்வீர்களா? இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் கைகளை உங்கள் மீது வைக்கிறேன், தேவனுடைய வார்த்தையின் படி, நீங்கள் குணமாக்கப்பட்டுவிட்டீர்கள். செல்லுங்கள், தேவனுடைய சமாதானம் உங்களோடு இருப்பதாக. 80 விசுவாசம் வையுங்கள்; சந்தேகப்பட வேண்டாம். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். ஓ, ஆச்சரியம், இப்போது எல்லோரும் எப்படி ஏகசிந்தையாக மாறுகிறார்கள். அப்படிதான் அதைப் பெற வேண்டும். இப்போது, சபையார் மீது தேவனுடைய மகிமை வெளிப்படுவதை நீங்கள் பார்க்கக்கூடிய ஒரு இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறீர்கள். நான் மீண்டும் இந்த கைக்குட்டையை உங்களுக்குத் தருகிறேன், உங்களுக்கு எப்போதாவது மறுபடியும் ஒரு இருதய படபடப்பு இருப்பது போல உணர்ந்தால், அதை உங்கள் இருதயத்தின் மீது வையுங்கள். அது இப்போது உங்களை விட்டு நீங்கிவிட்டது. இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார். ஆமென். விசுவாசம் வையுங்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்; நீங்கள் கேட்டதை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். விசுவாசம் வையுங்கள்; சந்தேகப்பட வேண்டாம். 81 சரி. வாருங்கள், சீமாட்டியே. நான் அதை, அந்த மனிதரைப் பற்றிச் சொன்னபோது உங்களுக்கு ஒரு வினோதமான உணர்வு ஏற்பட்டது, இல்லையா? அதுதான் உங்களிடமும் இருந்த பிரச்சனை. அது இப்போது உங்களை விட்டு நீங்கிவிட்டது. செல்லுங்கள், தேவன் உங்களோடு இருப்பாராக. அது இனி ஒருபோதும் உங்களைத் தொந்தரவு செய்யாது, என் சகோதரியே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்...?...உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். பயபக்தியாக இருங்கள். சகோதரியே, உங்களுக்கு முன்பாக நடமாடும் காரிருளைக் குறித்து நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று நான் ஆச்சரியப் படுகிறேன்? மரணம், உங்கள் பாதையில் கிடக்கிறது. [சகோதரர் பிரன்ஹாம் அந்தச் சீமாட்டியோடு பேசுகிறார்] அவர் செய்திருக்கிறார். புற்றுநோய் மரித்துவிட்டது. இப்போது, நீங்கள் செல்லலாம். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, என் சகோதரியே. உங்கள் விசுவாசம் அதை உங்களுக்காகச் செய்திருக்கிறது. மற்றும்...?... ஓ, ஆச்சரியம், நீங்கள் எவ்வளவாக விசுவாசிக்க வேண்டும். தேவன் மீதான விசுவாசத்தால் மரணத்தை ஜீவனாக மாற்ற முடியும். தேவன் மேல் விசுவாசம் வையுங்கள். சந்தேகப்பட வேண்டாம். 82 சற்று நேரத்திற்கு முன்பு நீங்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்தீர்கள், சீமாட்டியே, தன் ஜெப அட்டையை வைத்துக்கொண்டு, அங்கே அமர்ந்திருக்கிறீர்கள். அவள் வரிசையில் நிற்க எழுந்திருக்கத் தொடங்கினாள். ஆம், சகோதரியே, அது நீங்கள்தான். மேலும் அவள் ஜெப வரிசையில் சேர்ந்துவிடலாம் என்று நினைத்தாள், ஆனால் அவளால் அது முடியாமல் போனது. சற்று நேரத்திற்கு முன்பு-அந்த சர்க்கரை வியாதி உங்களை விட்டு நீங்கிவிட்டது என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அங்கேயே நில்லுங்கள்; பரவாயில்லை. நீங்கள் மேலே வர வேண்டி யதில்லை. இப்போது சென்று விசுவாசியுங்கள். நீங்கள் இன்சுலின் எடுத்துக்கொள்வதை நிறுத்தலாம். இயேசு கிறிஸ்து உங்களைக் குணமாக் குவார், மேலும் உங்கள் கண்களும் குணமாகும். சர்க்கரை வியாதிதான் உங்கள் கண்களை அந்த நிலைக்கு ஆளாக்குகிறது. தேவன் இப்போது உங்களை ஆசீர்வதிப்பாராக. சமாதானத்தோடு வீட்டிற்குச் செல்லுங்கள். தேவன் உங்களோடு இருப்பாராக. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம். 83 இளைஞனே, இங்கேயே ஓரத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் ஏதோ சில ஆவிக்குரிய கஷ்டங்களை எதிர்கொள்கிறீர்கள், இல்லையா? இங்கே அமர்ந்துகொண்டு, நேராக என்னைப் பார்த்துக்கொண்டிருக்கிற நபர், கடந்த சில நிமிடங்களாக அங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறார், ஒரு சிறிய-வெள்ளை நிற கோட் அணிந்துகொண்டு இங்கேயே அமர்ந்தி ருக்கிறார். நீங்கள்தான், ஐயா. எழுந்து நில்லுங்கள். அங்கேயே, ஆம். நீங்கள் ஏதோ ஒருவித ஆவிக்குரிய கஷ்டத்தைக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் அதோடு போராடிக்கொண்டிருக்கிறீர்கள். அது சரிதானே? அது இப்போது உங்களை விட்டு நீங்கப் போகிறது. தேவனுக்கு நேராக உங்கள் கையை அசைத்து, "நான் அதை ஏற்றுக்கொள்கிறேன்" என்று சொல்லுங்கள். அது உங்களை விட்டு நீங்கிவிட்டது. நீங்கள் கேட்டதை நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகிறீர்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வீட்டிற்குச் சென்று, குணமாக்கப்படுங்கள். 84 இந்த வழியைப் பார்த்துக்கொண்டு, அந்த வரிசையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஐயா, தேவன் உங்களை அந்த குடலிறக்கத்திலிருந்து குணமாக்குவார் என்று நினைக்கிறீர்களா? சற்று நேரத்திற்கு முன்பு அவர் அதைச் செய்தார் என்று நீங்கள் நினைத்தீர்கள், இல்லையா? அதைத்தான் அவர் செய்தார். கிறிஸ்து உங்களைக் குணமாக்குகிறார். உங்கள் இருதயக் கோளாறு உங்களை விட்டு நீங்கிவிட்டது, ஐயா. சந்தோஷப்பட்டு, மகிழ்ச்சியோடு வழியில் செல்லுங்கள். நான் உங்களுக்குச் சொல்லுவதை நீங்கள் செய்தால், இங்குள்ள முழு கூட்டமும் இந்த நேரத்தில் குணமாக்கப்பட முடியும். நீங்கள் அதைச் செய்வீர்களா? அதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா, அல்லது நான் உங்களைச் செய்யச் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்களா? ஒரு நிமிடம் உங்கள் கால்களில் எழுந்து நில்லுங்கள். ஒவ்வொருவரும் இந்த வார்த்தைகளைச் சொல்லுங்கள், "நீங்கள் இப்போது". முதலில் நீங்கள் இதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்தக் கட்டடத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் இப்போது விசுவாசிக்கிறீர்களா? அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டார் என்று விசுவாசிக்கிறீர்களா? இது அவருடைய ஆவியானவர் இங்கே உலாவுகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் என் மூலமாகப் பேசுகிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? அப்படியானால், இதோ வேதாகமத்திலிருந்தும், அவருடைய ஊழியக்காரனிடமிருந்தும் வந்த அவருடைய வார்த்தை, "கல்வாரியில் மரித்தபோது, இயேசு உங்கள் ஒவ்வொருவரையும் குணமாக்கினார். "அவர் உங்கள் மீறுதல்களினிமித்தம் காயப்பட்டார், அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமாக்கப்படுகிறீர்கள்." அதை விசுவாசிக்கப் போதுமான விசுவாசமுள்ள ஒவ்வொரு நபரும், இந்த நிமிடமே, முழுமையாக சுகமாக்கப்பட முடியும். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? நாம் ஜெபிப்போம். 85 சர்வவல்லமையுள்ள தேவனே, வியாதியஸ்தர்களுக்காக இங்கே வைக்கப் பட்டிருக்கும் இந்தக் கைக்குட்டைகளை ஆசீர்வதியும். மேலும் இப்போது உம்மைத் தங்களைக் குணமாக்குபவராக ஏற்றுக்கொள்ளும் இந்த வியாதியஸ்தர்களை ஆசீர்வதியும். சர்வவல்லமையுள்ள தேவனுடைய வல் லமை இந்த சபையாரின் நடுவில் இருந்து, இந்த மக்களைக் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் விசுவாசத்திற்கு நேராக அசைப்பதாக, அவர்கள் குணமடை வார்களாக. இப்போது, நான் உமது ஊழியக்காரனாக, இந்தக் கட்டடத்தில் மக்களைக் கட்டியிருக்கிற ஒவ்வொரு பிசாசின் வல்லமையின் மீதும் அதிகாரம் எடுக்கிறேன். விடு... நான் சொல்கிறேன், "சாத்தானே, இங்கிருந்து வெளியே வா. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், நீ முறிய டிக்கப் பட்டாய்." தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் மூலமாக முடவர்கள் நடப்பார்களாக, குருடர்கள் காண்பார்களாக, செவிடர்கள் கேட்பார்களாக, வியாதியஸ்தர்கள் குணமாக்கப்படுவார்களாக. ஆமென். இயேசுவைக் காண 2